உலகம் முழுக்க தகவல் தொடர்புக்கு தற்போது வாட்ஸ் அப் செயலி முக்கிய அங்கமாக விளங்குகிறது. பெரிய பெரிய கருத்தரங்குகள், அலுவலக மீட்டிங்குகள், கோப்புகள், ஆடியோ, வீடியோ தரவுகள் என அனைத்திற்குமே வாட்ஸ் அப் இல்லாமல் இனி செல்போன் வேஸ்ட் என்ற நிலைக்கு வந்து விட்டது.
இதனால் வாட்ஸ் அப் செயலியில் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வாட்ஸ்அப்-ல் ஏஐ- செயற்கை நுண்ணறிவுத் திறனைப் பயன்படுத்தி தகவல்களைத் தேடலாம் என்ற அம்சம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் வாட்ஸ் அப்-ல் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியும் புகுத்தப்பட்டது.
மேலும் அடிக்கடி தொடர்பு கொள்ளும் சில முக்கிய நபர்களை ஃபேவரைட்டிஸ் வைத்துக் கொள்ளும் மாற்றமும் கொண்டுவரப்பட்டது. இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அப்டேட்களை வாரி வழங்கும் வாட்ஸ் அப்-ல் தற்போது வந்துள்ளது அடுத்த புதிய வசதி.
ஆர்டர் செய்ததோ ரூ.30,000 மதிப்புமிக்க ஸ்பீக்கர்கள்.. வந்ததோ ரூ.2400 மதிப்புள்ள பொருள்..!
இனி வாட்ஸ் அப் வீடியோ காலில் AR (Augmented Reality) தொழில் நுட்பத்தைச் செயல்படுத்த வாட்ஸ் அப்-ன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது ஐபோன்களில் இதற்கான சோதனையை செய்து வருகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் இனி வாட்ஸ் அப்-ல் வீடியோ கால் பேசும்போது Filter, Background போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.இதன் மூலம் நாம் பேசும் போது நமது பின்னனியை மாற்றிக் கொள்ளலாம். மேலும் இதனை அடிக்கடி பயன்படுத்துவதற்காக Save செய்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் கசியாமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் பாதுகாப்பான இந்த அம்சம் விரைவில் ஆன்ட்ராய்டு போன்களிலும் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.