முடிவுக்கு வந்த Wynk Music.. ஏர்டெல் கொடுத்த பகீர் ஷாக்.. இருந்தாலும் அடுத்து வரப்போகும் சூப்பர் அப்டேட்

Published:

ஒரு காலத்தில் வானொலியிலும் கேஸெட்டுகளிலும் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த இசைப் பிரியர்கள் அடுத்தடுத்து சிடி பிளேயர், பென்டிரைவ், மெமரி கார்டு, ஐ பேட் என அடுத்தடுத்த பரிணாமங்களில் இசையைக் கேட்கத் தொடங்கினர். ஆனால் இன்று இவை அனைத்திற்கும் மூடுவிழா கொடுத்து விட்டது இசை செயலிகள். வின்க் மியூசிக், ஸ்பாட்டிஃபை போன்ற செயலிகள் தான் இன்று இசை ரசிகர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

இதில் ஏர்டெல் நிறுவனத்தின் ஓர் அங்கமாக விளங்கும் வின்க் மியூசிக் செயலியில் ஏர்டெல் தனது சந்தாதாரர்களுக்கு இலவச காலர் டியூன் மற்றும் பாடல்களை வழங்கி வந்தது. இதன் மூலம் பலர் ஏர்டெல் சந்தாதார்களாக மாறினர். மேலும் துல்லிய டால்பி அட்மாஸ் இசைத் தரத்துடன் பாடல்களை வின்க் மியூசிக் தளத்தில் இசை ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்தனர். தற்போது இந்த வின்க் மியூசிக் (Wynk Music) செயலிக்கு மூடுவிழா கொடுத்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

வாட்ஸ் அப் செயலியில் அடுத்து வரப்போகும் முக்கிய அப்டேட்.. வீடியோகாலில் அடுத்த அட்டகாசமான அப்டேட்..

கடந்த 2014-ல் அறிமுகப்படுத்தப்பட்ட வின்க் மியூசிக் 2019-ல் 100 மில்லியன் டவுன்லோடுகளைக் கொண்டு தரவிறக்கப் பட்டியலில் சாதனை படைத்தது. தற்போது வரை இசை ரசிகர்களால் அதிகம் விரும்பப் படும் வின்க் மியூசிக் தனது சேவையை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. வின்க் மியூசிக் தளத்தில் பணியாற்றுபவர்கள் ஏர்டெல்லுக்கு பணிமாற்றம் செய்யப்பட உள்ளதால் இந்த நடவடிக்கையை ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

எனினும் இந்த இசை சேவையில் எந்த மாற்றமும் இன்றி வின்க் மியூசிக் சந்தாதாரர்கள் அப்படியே ஆப்பிள் மியூசிக் நிறுவனதிற்கு மாற்றப்படுவார்கள். மேலும் ஆப்பிள் டிவி நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கலாம். இதற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி இருப்பதால் விரைவில் இந்த மாற்றம் தொடர்பான அறிவிப்பு வின்க் மீயூசிக் சந்தாதாரர்களுக்கு அனுப்ப்பட உள்ளது.

மேலும் உங்களுக்காக...