ஆர்டர் செய்ததோ ரூ.30,000 மதிப்புமிக்க ஸ்பீக்கர்கள்.. வந்ததோ ரூ.2400 மதிப்புள்ள பொருள்..!

Published:

பிளிப்கார்ட்டில் 30,000  ரூபாய் மதிப்புள்ள ஸ்பீக்கர் ஆர்டர் செய்த நிலையில் வெறும் ரூ.2400 மதிப்புள்ள பொருள் டெலிவரி செய்யப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சோலோ ஸ்பீக்கர் ஒன்றை பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்தார். ரூ.30000 மதிப்புள்ள இந்த ஸ்பீக்கர் டெலிவரி செய்யப்பட்டபோது அதை திறந்து பார்த்தபோது வெறும் 2400 மதிப்புள்ள ஸ்பீக்கர் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து அவர் பிளிப்கார்ட்டின் கஸ்டமர் கேரில் புகார் கொடுத்த நிலையில் இது குறித்து அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. பலமுறை தொடர்ச்சியாக புகார் அளித்தபோதிலும் பிளிப்கார்ட்டில் இருந்து எந்த ரெஸ்பான்ஸ் இல்லாத நிலையில் சமூக வலைதளத்தில் இது குறித்து பதிவு செய்துள்ளார்.

புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் அவர் செய்த பதிவை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களாகவே இதுபோன்ற புகார் அடிக்கடி எழுந்து கொண்டிருப்பதாகவும் இகாமர்ஸ் நிறுவனங்கள் இது குறித்து ஆய்வு செய்து எங்கே தவறு நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் இந்த பதிவுக்கு பலர் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...