Skype வரும் மே மாதத்துடன் இழுத்து மூடப்படும் நிலையில், இதே லாகின் ஐடியை பயன்படுத்தி Teams-ல் செய்யும் வசதியை மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. இது எப்படி என்று பார்ப்போம்.
முதலில், Microsoft Teams இணையதளத்திற்கு சென்று உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏற்ற வகையில் அதாவது Windows, Mac, Android, அல்லது iOS ஆகியவற்றுக்கு பொருத்தமான Teams பதிப்பை தேர்வு செய்து டவுன்லோட் செய்யவும்.
இரண்டாவதாக உங்கள் Skype லாகின் ஐடி , பாஸ்வேர்டை பயன்படுத்தி Teams-ல் லாகின் செய்ய வேண்டும். அதற்கு “Sign in” என்பதைக் கிளிக் செய்து யூசர் நேம், பாஸ்வேர்டை பதிவு செய்யுங்கள். உங்கள் Skype கணக்கு ஏற்கனவே ஒரு Microsoft கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், Teams அதை தானாகவே அடையாளம் காணும். ஒருவேளை பாஸ்வேர்டை மறந்துவிட்டால், “Forgot Password” கொடுத்து புதிய பாஸ்வேர்டை அமைத்து கொள்ளலாம்.
லாகின் செய்தவுடன் Teams உங்கள் Skype உரையாடல்கள் மற்றும் காண்டாக்ட்களை தானாகவே கொண்டு வரும். நீங்கள் எந்த தகவலையும் மாற்றத் தேவையில்லை. அப்படியே “Chat” பிரிவுக்குச் சென்று, உங்கள் பழைய உரையாடல்களை பார்க்கலாம். சியர்ச் பாக்ஸில் சென்று உங்களுடைய காண்டாக்ட், அல்லது குறிப்பிட்ட உரையாடல்களை தேடலாம்.
இதன் பின்னர் நீங்கள் எப்போதும் போல் Teams-ல் தகவல்களை பெறலாம், அனுப்பலாம், குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் செய்யலாம், Skype போலவே உரையாடலைத் தொடரலாம்.