மகாசிவராத்திரியன்று அதாவது பிப்ரவரி 26 அன்று அறிமுகமான இந்த செயலி, இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகளில் டிரெண்டிங் ஆக உள்ளது. இது எளிமையாக, இலவசமாகவும் இருப்பதுடன், யாரும் பின்பற்றக்கூடிய வேகமான 7 நிமிட வழிகாட்டும் தியானத்தையும் வழங்குவது தான் ஒரே காரணம்.
மேலும் Miracle of Mind என்ற செயலி ஆன்மீக அறிவை பகிரும் AI-சக்தியுள்ள கருவியையும் கொண்டுள்ளது. இந்த செயலி எதிர்பார்த்ததை விட அதிக ஆதரவை பெற்ற நிலையில், சத்குரு X பக்கத்தில் மனநல பிரச்சினைகள் குறித்து கவலை வெளியிட்டார். “2050க்குள் உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கை மனநல சிக்கல்கள் பாதிக்கக்கூடும்,” என்று அவர் எச்சரித்துள்ளார்.