அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறக்கும் நேரம் மாற்றம்.. புதிய நேரம் என்ன?

  அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோயில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்ட நிலையில், இந்த கோவில் திறந்த நாளிலிருந்து தொடர்ந்து…

ayodhya 2

 

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்ட நிலையில், இந்த கோவில் திறந்த நாளிலிருந்து தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சில நாட்களில் லட்ச கணக்கில் கூட பக்தர்கள் வருகை தந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் இதுவரை காலை 7 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில், தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், திறக்கும் நேரம் காலை 6:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த புதிய நேரம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கோவில் அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.

காலை 6:00 மணிக்கு கோவில் திறக்கப்பட்டாலும், காலை 6:30 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் காலை 11:50 மணி வரை கோவிலுக்குள் இருக்கலாம் என்றும், அதன் பின்னர் 12 மணிக்கு கோவில் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மதியம் 1 மணி முதல் 6:50 மணி வரை வழிபாட்டு நேரம் தொடரும் என்றும், மாலை 7 மணிக்கு சாயந்திர ஆரத்தி நடைபெறும். பக்தர்கள் இரவு 9:45 மணி வரை கோவிலில் வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இரவு 10 மணிக்கு கோவில் முழுமையாக மூடப்படும் என்றும் அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.

எனவே, அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் காலை 6:00 மணிக்கு கோவில் திறக்கப்படுவதை நினைவில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.