நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா… ஒரே தேர்தலில் 2 திராவிட கட்சிகளுக்கும் ஆப்பு.. விஜய்யின் மாஸ் திட்டம்..!

தமிழக அரசியலில் இதுவரை புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் ஒன்று தனியாக போட்டியிட்டு படுதோல்வி அடைவார்கள், அல்லது ஏதாவது ஒரு திராவிட கட்சியுடன் இணைந்து ஐக்கியமாகி விடுவார்கள். அப்படித்தான் சரத்குமார், விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கட்சி…

eps mks vijay

தமிழக அரசியலில் இதுவரை புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் ஒன்று தனியாக போட்டியிட்டு படுதோல்வி அடைவார்கள், அல்லது ஏதாவது ஒரு திராவிட கட்சியுடன் இணைந்து ஐக்கியமாகி விடுவார்கள். அப்படித்தான் சரத்குமார், விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கட்சி ஆரம்பித்து மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்தனர்.
இந்த நிலையில், விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நிலையில், இவரை அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் பிடிக்காதவர்கள் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில், விஜய் தனித்து போட்டியிட்டு திராவிட கட்சிகளையும் மீறி வெற்றி பெற முடியுமா என்பதை மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் அரசியல் பார்வையாளர்கள் பார்க்கின்றனர்.

இந்த நிலையில், அதிமுக, திமுக இல்லாத ஒரு புதிய கூட்டணி அமைப்பதில் விஜய் ஒரு மாஸ் திட்டம் வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, மக்கள் நலக் கூட்டணி என்ற ஒரு கூட்டணி இதேபோன்று ஆரம்பித்தது நிலையில், அந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. ஆனால், தற்போது விஜய் அமைக்க இருக்கும் கூட்டணி ஒரு மாஸ் கூட்டணி என்று கூறப்படுகிறது.

இன்னும் சில நாட்களில் விஜய் டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்திக்க இருப்பதாகவும், தமிழக வெற்றிக் கழகம் – காங்கிரஸ் இணைந்து ஒரு புதிய கூட்டணியை அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேமுதிக, கம்யூனிஸ்டுகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படி மட்டும் ஒன்று நடந்தால், திமுக கூடாராம் காலி ஆகிவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது. அதேபோல், அதிமுக கூட்டணியிலும் அதிமுக, பாஜக தவிர வேறு கட்சிகள் இருக்காது என்றும், பாமக இந்த இரண்டு திராவிட கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் முதலாக, இரண்டு திராவிட கட்சிகளையும் ஒரே தேர்தலில் வீழ்த்த விஜய் போட்டுள்ள இந்த மாஸ் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? இப்படி ஒரு முயற்சியை விஜய் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.