விஜய், சீமான், அன்புமணி, பிரேமலதா.. மீண்டும் ஒரு மக்கள் நல கூட்டணியா?

  2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வித்தியாசமான கூட்டணி அமையலாம் என ஏற்கனவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், விஜய், சீமான், அன்புமணி, பிரேமலதா ஆகிய நால்வர்…

alliance

 

2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வித்தியாசமான கூட்டணி அமையலாம் என ஏற்கனவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், விஜய், சீமான், அன்புமணி, பிரேமலதா ஆகிய நால்வர் கூட்டணி அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஒரு பக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டுகள் போன்ற கட்சிகளின் கூட்டணியும் ஏற்கனவே உறுதியாக உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், சீமான் தனித்துவமாகவே போட்டியிடுவேன் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய நிலவரப்படி, விஜய், சீமான், அன்புமணி, பிரேமலதா ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மக்கள் நலக் கூட்டணி என்ற மூன்றாவது கூட்டணி தமிழகத்தில் உருவாகி, ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாத நிலையில் படுதோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது பேசப்படும் கூட்டணி வித்தியாசமானது என்பதால், இது 2 திராவிடக் கட்சிகளின் கூட்டணிக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்க்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வாக்குகள் கிடைக்கும் என்றும், சீமான் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற்றிருப்பது குறிப்பிடப்படுகிறது. தேமுதிக, பாமக என்ற இரு கட்சிகளுக்கும் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளதாலும், இந்த நான்கு கட்சிகள் இணைந்தால், இரண்டு திராவிடக் கட்சிகளும் பின்னடைவு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இந்த புதிய கூட்டணி குறைந்தது 20% வாக்குகளைப் பிரித்தால், எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாமல் தொங்கு சட்டசபை உருவாகும் வாய்ப்பு அதிகம். அப்போது இந்த நால்வர் கூட்டணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.