“ஆடுங்கடா என்ன சுத்தி.. பாசிசம் பாயசம் எல்லாம் அப்புறம் தான்.. அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய்?

தமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டும் பலம் வாய்ந்த கூட்டணிகள் உள்ளன. முதல் தேர்தலில் விஜய் இந்த இரண்டு பலம் வாய்ந்த கூட்டணிகளை மீறி ஜெயிப்பது என்பது கனவில் கூட நடக்காத…

eps mks vijay

தமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டும் பலம் வாய்ந்த கூட்டணிகள் உள்ளன. முதல் தேர்தலில் விஜய் இந்த இரண்டு பலம் வாய்ந்த கூட்டணிகளை மீறி ஜெயிப்பது என்பது கனவில் கூட நடக்காத ஒன்றாகும். எனவே, பிஜேபி எதிர்ப்பு நிலையில் விஜய் இருந்தாலும், கடைசி நேரத்தில் கண்டிப்பாக அவர் அதிமுக-பாஜக கூட்டணியில் தான் சேர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

தற்போது நடக்கப்போவது சட்டமன்ற தேர்தல். பாஜக என்னதான் கொள்கை எதிரியாக இருந்தாலும், திமுகவை ஆட்சியில் இருந்து இறக்குவது தான் விஜய்யின் பிரதான நோக்கமாக இருக்கும் என்றும், அதனால் திமுகவை ஆட்சியில் இருந்து கீழிறக்குவதற்காக அதிமுக-பாஜக கூட்டணியுடன் சேர்ந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை தப்பி தவறி விஜய் தனித்து நின்று, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால், அதிமுக கூட்டணியையும் பகைத்துக்கொண்டு, திமுக கூட்டணியையும் பகைத்து கொண்டு தனியாக இன்னும் ஐந்து வருடம் விஜய்யால் அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே, திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால், விஜய்க்கு ஒரே ஆப்ஷன் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய வேண்டியது தான்.

“கொள்கை எதிரி”, “பாசிசம்”, “பாயாசம்” என்பவற்றை பின்னர் பார்க்கலாம். இப்போதைக்கு திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் விஜய்யின் பிரதான எண்ணமாக இருக்கும் என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் தொடங்கிய கட்சிகள் முதல் தேர்தலில் தனியாக நின்று இதுவரை தோல்விதான் அடைந்திருக்கிறார்கள் என்றும், அதற்கு விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் சாட்சி என்றும் எத்தனை சதவீத வாக்குகள் நமக்கு இருக்கின்றன என்பதை டெஸ்ட் செய்வதற்காக தனியாக நிற்கும் அளவுக்கு விஜய்க்கு நேரமில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த முறை விஜய் கட்சி தோற்று, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால், விஜய்யை அரசியலிலிருந்து விலக்க முயற்சி செய்யக்கூடிய சூழல் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. எனவே, விஜய் கண்டிப்பாக அதிமுக கூட்டணியில் இணைந்து ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவை அனைத்தும் விஜய்க்கு நன்றாகவே தெரியும். எனவே கடைசி நேரத்தில், தனது கொள்கை எதிரிகளை பிரதானமாக எண்ணாமல், அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்து விடுவார் என்று தான் பலர் கூறி வருகின்றனர். ஏற்கனவே திமுக கூட்டணியை தொகுப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ளதாக சமீபத்தில் விஜய் பேசியதையும் குறிப்பிடலாம்.