ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான குவாலிபையர் 2 போட்டியில், சஷாங்க் கிங் இரண்டு ரன்களில் அவுட் ஆனபோது, அவரை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பயங்கரமாக திட்டியதாகவும், ஒரு கட்டத்தில் அடித்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் சஷாங்க் , மனம் திறந்து கூறியுள்ளார்.
பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில், பஞ்சாப் அணி 204 ரன்கள் எடுத்தது. ஆனால் 17வது ஓவரில் சஷாங்க் இரண்டு ரன்கள் எடுத்தபோது ரன் அவுட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது மைதானத்திலேயே ஸ்ரேயாஸ் ஐயர் திட்டியதாக கூறப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் பரவியுள்ளது. இது குறித்து பேசிய சஷாங்க் “அப்போது நான் செய்த தவறு உண்மைதான். நான் தண்டனைக்கு உரியவன் தான். என்னை திட்டுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஏன், என்னை அவர் அடித்திருக்க கூட செய்யலாம். என் அப்பா கூட பைனல்ஸ் வரை என்னிடம் பேசவில்லை. அந்த அளவுக்கு என் மீது கோபத்தில் இருந்தார்,” என்று தெரிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில், ஸ்ரேயாஸ் திட்டிய சில நிமிடங்களில் என்னை விருந்துக்கு அழைத்தார் என்றும், எனக்கு தெரிந்து உலகிலேயே மிகச்சிறந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தான் என்றும், அந்த அளவுக்கு அவர் மனித நேயம் உள்ளவர் என்றும்,” தெரிவித்தார்.
“அவர் எங்களை சுதந்திரமாக வைத்திருந்தார். எல்லோரையும் சமமாக மதித்தார். அவருக்கு ஆட்டிடியூட் இருப்பதாக கூறப்படுவது உண்மை இல்லை. ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் போது, அனைவரையும் ரிலாக்ஸ் பண்ணுவார். யாருக்காவது ஏதாவது யோசனை தோன்றினால், தாராளமாக என்னிடம் சொல்லலாம். நியாயமானது என்றால் உடனே ஏற்றுக் கொள்வேன் என்று மனம் விட்டு பேசுவார். இப்படி ஒரு கேப்டனை பார்ப்பது அபூர்வம்,” என்று தெரிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில், பெங்களூர் அணிக்கு எதிராக உயிரை கொடுத்து சஷாங்க் வெற்றிக்காக போராடினார் என்பதும், இன்னும் ஒரே ஒரு பந்து இருந்திருந்தால் பஞ்சாப் அணியை வெற்றி பெற செய்திருப்பார் என்பதும், அவரது ஆட்டத்தை அன்றைய தினம் ஸ்ரேயாஸ் ஐயர் பாராட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.