ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரையும் சந்திக்க சசிகலா திட்டம்.. தேர்தலுக்கு ஒருங்கிணைப்பா?

Published:

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒருங்கிணைக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக அவர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் தனித்தனியே சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக கடந்த சில மாதங்களாக இரண்டாக பிளவு பட்டு உள்ளது என்பதும் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும் இருந்துவரும் நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்த டிடிவி தினகரன் தனியாக ஒரு கட்சியை நடத்தி வருகிறார் என்பதும் அதேபோல் சசிகலாவும் தனது ஆதரவாளர்களுடன் இருக்கிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக பிரிந்து போகக்கூடாது என்று அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக-வை வீழ்த்துவதற்கு அதிமுகவை ஒருங்கிணைக்க ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒருங்கிணைத்து திமுகவை வீழ்த்தி அந்த வெற்றியை எம்ஜிஆர் இடம் சமர்ப்பிப்போம் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரையும் சசிகலா சந்தித்தால் கட்சி ஒன்றிணைமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் உங்களுக்காக...