ஜனவரி 24ஆம் தேதி முதல் JEE தேர்வு.. ஹால் டிக்கெட் எப்போது?

Published:

ஜனவரி 24ஆம் தேதி முதல் JEE மெயின் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட் எப்போது கிடைக்கும் என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி ஆகியவற்றில் உள்ள படிப்பில் சேருவதற்கு JEE மெயின் தேர்வு எழுதுவது கட்டாயம் என்பதும் இந்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்பதும் தெரிந்ததே. இந்த இரண்டு கட்டங்களில் நடைபெறும் தேர்வில் எதில் அதிக மதிப்பெண்கள் இருக்கிறதோ அதை விண்ணப்பதாரர்கள் வைத்துக் கொள்ளலாம்.

தமிழ் உல் படம் பழமொழிகளில் இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்திவரும் நிலையில் ஆங்கிலத்தில் எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் JEE மெயின் தேர்வின் முதல் கட்ட தேர்வு ஜனவரி 24 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் அன்றைய நாள் மட்டும் தேர்வு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி முதல் JEE தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் JEE மெயின் தேர்வு எழுதுபவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஹால் டிக்கெட் வரும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...