மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு.. பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ச்சி..!

Published:

மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்ததை அடுத்து சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தையில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. இதனை அடுத்து அமைத்து செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறிய போது ’மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று பெறுகின்ற ஊதியத்திலிருந்து ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதாகவும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் அதை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் தேதி டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று 10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மூன்று சதவீத ஊதியம் வழங்கப்படும் என்றும் இதனை தொழிற்சங்க நிர்வாகிகள் சார்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

tneb

இந்த ஊதிய உயர்வு மூலம் மின்வாரியத்திற்கு 527 கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் செலவாகும் என்றும் அவர் கூறினார். மேலும் 2019 ஆம் ஆண்டிலிருந்து கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை 2022 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை மாதம் ஒன்றுக்கு 500 வீதம் இரண்டு தவணைகள் ஆகவும் 2022 ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை இரண்டு தவணைகளாக வழங்கவும் அரசு முடிவு செய்ததாகவும் இதயம் தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஊதிய உயர்வு காரணமாக 75 ஆயிரத்து 978 ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் பத்து வருடங்கள் பணி முடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பணி பலனாக மூன்று சதவீதம் பெறும் ஊழியர்கள் எண்ணிக்கை 62542 என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த பேட்டியை அடுத்து சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் ஊழியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

மேலும் உங்களுக்காக...