அனைத்து ரேஷன் கார்டுகளுக்குமே கிடைக்க போகுதாமே.. சட்டசபையில் அமைச்சர் சக்ரபாணி சொன்ன நல்ல செய்தி

Published:

சென்னை: அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் சட்டசபையில் அமைச்சர் சக்ரபாணி சொன்ன நல்ல செய்தி கூயிருக்கிறார். கடந்த 3 மாதங்களாக அவதிப்பட்ட மக்களுக்கு நிம்மதி தான் இனி..

இதுகுறித்து சட்டசபையில் நேற்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், “திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 15 லட்சத்து 79 ஆயிரத்து 393 ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. கடைசியாக 2 லட்சத்து 92 ஆயிரத்து 43 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 9 ஆயிரத்து 784 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஆதார் எண்ணுடன் சரிபார்க்கப்பட்டு ரேஷன் அட்டைகள் அச்சிடும் நிலையில் இருக்கிறது. மீதமுள்ளவற்றை பரிசீலித்து ஆய்வு செய்து தகுதியுள்ள நபர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்.

முன்னுரிமையற்ற ரேஷன் அட்டைகளில் இருந்து 15 லட்சத்து 5 ஆயிரத்து 45 ரேஷன் அட்டைகள் முன்னுரிமையுள்ள ரேஷன் அட்டைகளாக மாற்றப்பட்டு உள்ளன. இதனால், 48 லட்சத்து 91 ஆயிரத்து 394 பேர் பயன்பெற்றுள்ளார்கள்..

கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் இதுவரை 699 முழுநேர ரேஷன் கடைகளும், 1310 பகுதிநேர ரேஷன் கடைகளும் என மொத்தம் 2009 ரேஷன் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. மேலும், 3191 ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றன.ங

ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்காக கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் தற்போது 9 ஆயிரத்து 182 ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து கடைகளிலும் கண் கருவிழி சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட உள்ளது.

மத்திய அரசால் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மண்எண்ணெய் 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 59,852 கிலோ லிட்டராக இருந்த நிலையில் இந்த ஒதுக்கீடு படிப்படியாக குறைக்கப்பட்டது.

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7,536 கிலோ லிட்டராகக் குறைக்கப்பட்டு 2,802 கிலோ லிட்டர் வரை மண்எண்ணெய் குறைக்கப்பட்டு தற்போது 2024-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 1,084 கிலோ லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மண்எண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். தொடர்புடைய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தும், நம் மாநிலத்தில் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் அதிகம் உள்ளதால் மண்எண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வால்பாறை, நீலகிரி போன்ற மலைப் பகுதிகளில் மண்எண்ணெய்யின் தேவையைக் கூறி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தி மு க ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 22 லட்சத்து 97 ஆயிரத்து 343 விவசாயிகளிடம் இருந்து ஒரு கோடியே 31 லட்சத்து 90 ஆயிரத்து 778 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ,28 ஆயிரத்து 245 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மே, ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டு அளவினை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம். அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது” இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி பேசினார்.

மேலும் உங்களுக்காக...