நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால், ராகுல் காந்தி ஒரே கல்லில் நான்கு மாங்காய்களை அடிக்க முடியும் என்றும், ஆனால் அவருக்கு இதெல்லாம் புரிகிறதா என்று தெரியவில்லை என்றும் அரசியல் ஆய்வாளர் ஸ்ரீராம் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை, 1967 ஆம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை இன்னும் பெறவில்லை. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு தற்போது ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்தால், அந்த கட்சி கண்டிப்பாக கூட்டணி அரசியலில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும். 55 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. ஆனால், இதையெல்லாம் செய்ய ஒரே ஒருவர் மனது வைக்க வேண்டும்; அவர்தான் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி மட்டும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டால், அவருக்கு ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் கிடைக்கும் என்று ஸ்ரீராம் பட்டியலிடுகிறார்:
55 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது.
விஜய்க்கு புதுச்சேரியில் நல்ல செல்வாக்கு இருப்பதால், அங்கும் ஆட்சியைப்கைப்பற்றலாம்.
காங்கிரஸ் கட்சி மோசமான நிலையில் உள்ள கேரளாவிலும், விஜய்யின் செல்வாக்கை பயன்படுத்தி நல்ல வாக்கு சதவீதத்தைப் பெறலாம்.
2029 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் விஜய்யுடன் கூட்டணி வைத்தால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறலாம்.
இந்த நான்கு மாங்காய்களையும் ஒரே கல்லில் ராகுல் காந்தி அடிக்க வேண்டுமென்றால், அவர் விஜய்யுடன் கூட்டணி சேர வேண்டும் என்று ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இங்குள்ள தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இவற்றையெல்லாம் ராகுல் காந்தியிடம் எடுத்து கூறுவார்களா, அது ராகுல் காந்திக்கு புரியுமா என்று தெரியவில்லை என்று ஸ்ரீராம் சந்தேகிக்கிறார். “இப்படி ஒரு நல்ல வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு இதைவிட சிறப்பாக கிடைக்காது. இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்று மற்ற அரசியல் ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.