ஆட்டநாயகன் என்று நிரூபித்த தளபதி; வசூல் மழையில் குளிக்கும் ‘வாரிசு’!!

Published:

கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டது. என்று கூறலாம் ஏனென்றால் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது.

அதன்படி கடந்த வாரம் புதன்கிழமை அன்று துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இளைஞர்கள் மத்தியில் துணிவு படம் வரவேற்பு பெற்று வருவதாகவும், குடும்பங்களின் மத்தியில் வாரிசு படம் நல்லதொரு வரவேற்பு பெற்று வருவதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் யார் ஆட்டநாயகன்? யார் பொங்கல் வின்னர்? என்ற கேள்வி தற்போது வரை சுற்றிக்கொண்டு தான் வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் வசூல்களை புரிந்து சாதனை செய்து வருவதாக தெரிகிறது.

அதன்படி வாரிசு படம் உலக அளவில் 150 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது படக்குழுவினருக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது.

அதுவும் ஐந்து நாட்களில் 150 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் தனது ஆபீஸியல் twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும் ஆட்டநாயகன் என்றும் வாரிசு படத்தின் டயலாக் ஒன்றையும் ஷேர் செய்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...