திமுகவுடன் மதிமுக இணைப்பா? அவைத்தலைவர் கடிதத்திற்கு துரை வைகோ பதில்..!

Published:

மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என மதிமுக அவை தலைவர் துரைசாமி வைகோவிற்கு கடிதம் எழுதிய நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என துரை வைகோ பேட்டி அளித்துள்ளார்.

திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1993 ஆம் ஆண்டு வைகோ திமுகவில் இருந்து வெளியேறினார். அதன் பின் அவர் 1994 ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி மதிமுக என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சி கடந்த பல ஆண்டுகளாக அதிமுக திமுக என மாறி மாறி தேர்தல் கூட்டணி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட ஏற்பட்டதனால் தான் மதிமுக தோன்றிய நிலையில் மீண்டும் திமுக உடனே அக்கட்சி கூட்டணி வைத்ததால் பொதுமக்கள் அக்கட்சியின் மீது கட்சியின் நண்பகத்தன்மை குறித்து பரபரப்பாக பேசினர். அதன் பிறகு அதிமுக, பாஜா கூட்டணியிலும் மதிமுக இணைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து மதிமுக போட்டியிட்டு படுதோல்வி அடைந்த நிலையில் 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் திமுகவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றது. 2006 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் தொடர்ந்த மதிமுக 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டும் என்றது.

durai vaiko2016 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணி என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதில் விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், தேமுதிக ஆகிய கட்சிகளை இணைத்தது. விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் விஜயகாந்த் உள்பட இந்த கூட்டணியில் இருந்த அனைத்து தலைவர்களும் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு மீண்டும் திமுகவுடன் மதிமுக கூட்டணி அமைத்தது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதிமுகவை அதன் தாய் கழகமான திமுகவுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சிறந்ததாக இருக்கும் என மதிமுகவை தலைவர் திருப்பூர் துரைச்சாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு கடிதம் எழுதியுளார். மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் வருத்தம் அளிப்பதாகவும் கட்சியினர் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க திமுகவுடன் இணைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்

இதற்கு பதில் கூறிய மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, மனக்கசப்பு காரணமாக திமுகவுடன் மதிமுக இணைப்பு என அவைதலைவர் கடிதம் எழுதியிருப்பதாகவும் திமுகவுடன் மதிமுகவை இணைப்பதில் கட்சியினருக்கு துளியும் உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார். திமுக கூட்டணியில் இருந்தாலும் மதிமுகவுக்கு என்று தனிப்பட்ட கொள்கை இருப்பதாகவும் இருப்பினும் மூத்த நிர்வாகி என்ற மரியாதை காரணமாக துரைசாமி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் துரை வைகோ தெரிவித்தார்.

மேலும் உங்களுக்காக...