அஜித்தின் நெருங்கிய நண்பர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்.. கடைசி வரை உதவாத அஜித்..!

By Bala Siva

Published:

அஜித் நடித்த பல திரைப்படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி கடந்த சில  மாதங்களாக உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

அஜித்தின் பல வெற்றி படங்களை தயாரித்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி என்பதும் அஜித்தின் இன்றைய நிலைமைக்கு அடித்தளம் அமைத்தவர் அவர்தான் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு அஜித்துக்கு ஒரு நல்ல நிலையை உருவாக்கி தந்த தயாரிப்பாளர் எஸ்எஸ் சக்கரவர்த்தி கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடியதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில் அஜித் அவருக்கு உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித் எந்த விதத்திலும் உதவவில்லை என்றும் கூறப்படுகிறது.  ஆனால் அஜித்துக்கு நெருக்கமானவர்கள் சிலர் கூறிய போது அஜித், சக்கரவர்த்தியின் சிகிச்சைக்கு உதவியதாகவும் ஆனால் அதை அவர் விளம்பர படுத்தவில்லை என்றும் கூறுகின்றனர். இந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்று நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்.  அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

அஜித் நடித்த ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு உள்ளிட்ட படங்களை தயாரித்தார் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சிம்பு நடித்த காளை, வாலு ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மறைவிற்கு தமிழ் திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் நேரிலும் தொலைபேசி மூலம் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...