போலி அழைப்புகள், மோசடி எஸ்.எம்.எஸ்களுக்கு முற்றுப்புள்ளி.. AI ஃபில்டர் கட்டாயம் என டிராய் உத்தரவு..!

Published:

மொபைல் போன் பயன்படுத்தபவர்களுக்கு மிகப்பெரிய தொல்லையாக இருப்பது விளம்பர அழைப்புகள் மற்றும் மோசடி எஸ்எம்எஸ்கள் என்பதும் மோசடி எஸ்எம்எஸ் மூலம் பலர் தங்கள் உடைய கடினமான உழைப்பில் கிடைத்த பணத்தை இழந்துள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இதற்கு முடிவு கட்ட டிராய் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இதன்படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் AI ஃபில்டர் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்த பில்டர் மூலம் தேவையற்ற அழைப்புகள் மற்றும் மோசடி எஸ்எம்எஸ் பயனாளிக்கு செல்ல விடாமல் தடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. தினந்தோறும் மொபைல் போன் பயனாளிகளுக்கு பல தேவையில்லாத விளம்பர அழைப்புகள் வருகிறது என்பதும் இதனால் மிகப்பெரிய தொந்தரவாக மொபைல் போன் பயனர்களுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சில மோசடி எஸ்எம்எஸ்கள் ஆபத்தான லிங்குகளை அனுப்பி உள்ளதும் அதனை கிளிக் செய்தால் நம் வங்கியில் உள்ள பணம் மொத்தமும் திருடப்படுகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இதனை அடுத்து டிராய் தற்போது அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் இடையே AI ஃபில்டர் வடிவமைக்க வேண்டும் என்றும் மே ஒன்றாம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு போலி மற்றும் விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் தொடர்பான விதிகளை மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.

ai filter1 1இதன் மூலம் தேவையற்ற ஸ்பாம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. Aritificial Intelligence Spam என்ற AI ஃபில்டர் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கட்டாயம் என்று டிராய் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து ஏற்கனவே ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் AI ஃபில்டர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜியோவும் AI ஃபில்டர் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே மே 1ஆம் தேதியில் இருந்து இந்த AI ஃபில்டர் செயல்பட தொடங்கி விட்டால் தேவையற்ற அழைப்புகள் மற்றும் மோசடி எஸ்எம்எஸ் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோசடி செய்பவர்கள் அப்பாவி வாடிக்கையாளர்களை ஏமாற்றி அவர்களின் பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து மோசடி செய்து தப்பித்து வரும் நிலையில் இது ஒரு சிறந்த நடவடிக்கை என்று டிராய் அமைப்பை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மே ஒன்றாம் தேதி முதல் தடுக்கப்படுவது உறுதி என ட்ராய் தெரிவித்துள்ளது.

மேலும் உங்களுக்காக...