நீட் தேர்வு விலக்கு மசோதா.. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக திட்டம்!

Published:

வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நீட் தேர்வு விலக்கு குறித்த குரல் எழுப்ப திமுக எம்பிக்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதா பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை காலதாமதாமாவது, சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும், மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் உள்ளிட்டவை குறித்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் திமுக எம்பிகளுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் சிறுபான்மை மாணவர்களுக்கான மெட்ரிக் கல்வி உதவி தொகையை நிறுத்தியது குறித்தும் குரல் எழுப்ப வேண்டும் என திமுக எம்பி களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன

சென்னையில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் மேலும் சில முக்கிய பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த பிரச்சனைகள் அனைத்தையும் குறித்து குரல் வேண்டும் என திமுக எம்பி களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...