நாளை அட்சயதிருதி.. இன்று தங்கம் விலை 480 ரூபாய் குறைவு.. மகிழ்ச்சியில் மக்கள்..!

Published:

நாளை அட்சய திருதியை முன்னிட்டு ஏராளமானோர் தங்கம் வாங்குவார்கள் என்ற நிலையில் இன்று ஒரு கிராமுக்கு 60 ரூபாய், ஒரு சவரனுக்கு 480 ரூபாய் தங்கம் குறைந்துள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு வருடமும் வரும் அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கமாவது வாங்க வேண்டும் என ஏழை எளிய மக்களும் ஏராளமான தங்கத்தை வாங்கி குவிக்க வேண்டும் என்று பணக்காரர்களும் திட்டமிட்டு இருப்பார்கள்.

gold theft

இந்த நிலையில் அட்சய திருதியை அன்று காலை 5 மணிக்கு நகைக்கடைகள் திறந்து விடும் என்பதும் நள்ளிரவு 12 மணி வரை நகைக்கடைகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அட்சய திருதியை அன்று சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள நகை கடைகளில் கோடிக்கணக்கில் நகை விற்கும் என்பதும் அன்றைய தினம் நகை வாங்கினால் மிகவும் விசேஷமாக இருக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடப்பது.

இந்த நிலையை கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் தங்கத்தின் விலை இன்று திடீரென ஒரு கிராமுக்கு 60 ரூபாய் வரை குறைந்திருப்பது மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. நாளை தங்கத்தின் மார்க்கெட் விடுமுறை என்பதால் இன்றைய விலை தான் நாளையும் விற்கப்படும் என்பதால் நாளையும் 60 ரூபாய் குறைந்து தான் விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

202008241054364856 Tamil News gold price decreased today SECVPF

இந்த நிலையில் சென்னை தங்க மார்க்கெட்டில் இன்று ஒரு கிராம் 5605.00என்றும் ஒரு சவரன் 44 ஆயிரத்து 840 என்றும் விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6059 என்றும் 8 கிராம் 48,472 என்றும் விற்பனையாகி வருகிறது. அட்சயதிருதியை நேரத்தில் தங்கம் விலை குறைந்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னும் குறைய வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

மேலும் உங்களுக்காக...