விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்ததால் எனக்கு அவமானம் தான்: சாந்தனு பேட்டி..!

Published:

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் சாந்தனு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்று கூறப்பட்ட நிலையில் 10 நிமிடங்கள் மட்டுமே தோன்றினார். இந்த நிலையில் அவர் நடித்த ராவண கோட்டம் திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இது குறித்து அளித்த பேட்டியில் அவர் மாஸ்டர் படத்தில் நடித்தது தனக்கு பெரும் அவமானமாக இருந்தது என்று கூறினார்.

விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடிக்கிறோம் என்றால் யாருக்குத்தான் ஆசை இருக்காது, அதிலும் நான் அவருடைய தீவிர ரசிகன், எனவே அவருடன் நடிப்பதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்தேன். 30 நாட்கள் நடித்த அதில் எனக்கு சண்டை காட்சிகள் இருந்தது, கெளரியுடன் பாடல் காட்சி இருந்தது.

குறிப்பாக சண்டைக் காட்சியில் நான் சுற்றி வளைக்கப்பட்டபோது என்னை விஜய் வந்து காப்பாற்றுவார், அதே போல் விஜய்யை நான் காப்பாற்றுவேன். இந்த காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டது. இந்த காட்சிகளில் நடிப்பதற்காக நான் பல நாட்கள் ஸ்டண்ட் பயிற்சி செய்தேன். ஆனால் படத்தில் என்னுடைய காட்சி மொத்தமாகவே பத்தே பத்து நிமிடங்கள் தான் மாஸ்டர் படத்தில் இருந்தது.

நான் குறைந்தது 40 நிமிடங்களது மாஸ்டர் படத்தில் வருவேன். அதன் மூலம் எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த படத்தில் வெறும் பத்து நிமிடங்கள் வந்ததால் நான் கேலிக்குரியவன் ஆனேன். அதனால் எனக்கு பெரும் அவமானம்தான் ஏற்பட்டது என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது நடித்து வரும் ராவணக் கூட்டம் திரைப்படம் தனக்கு திரையுலக வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி தரும் என்று நம்புவதாகவும் அந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றும் கூறியிருந்தார்.

தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்களில் ஒருவரான சாந்தனு மாஸ்டர் படத்தில் அவருடன் நடித்ததை அவமானமாக கருதுகிறேன் என்று கூறிய பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...