12 ஓவர்களில் முடிக்க வேண்டிய மேட்ச்.. ரன்ரேட்டை கோட்டைவிட்ட சிஎஸ்கே..!

Published:

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த போட்டியை சென்னை அணி சீக்கிரம் முடித்து இருந்தால் ரன் ரேட் அதிகமாக இருக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

135 என்ற இலக்கை நோக்கி நேற்று சென்னை அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் மற்றும் கான்வே ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 87 ரன்கள் அணியின் ஸ்கோர் இருந்தபோது ருத்ராஜ் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக பதினைந்து ஓவர்களுக்குள் இந்த போட்டி முடிந்திருக்கும்.

csk srhருத்ராஜ் அவுட் ஆனவுடன் ரகானே, அம்பத்தி ராயுடு ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனை அடுத்து இந்த போட்டி 18 .4 ஓவர்களில் தான் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டி குறித்து தங்களது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சிஎஸ்கே அணி இந்த போட்டியை 12 அல்லது 13 ஓவர்களில் முடித்திருக்கும் வேண்டும் அவ்வாறு முடித்து இருந்தால் ரன் ரேட் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்து வருகின்றனர்.

மிகவும் அரிதாகவே குறைவான இலக்கு கிடைக்கும் என்றும் அந்த இலக்கு கிடைத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதை சரியாக பயன்படுத்தாமல் 18.4 ஓவர் வரை இந்த போட்டியை முடிக்க இழுத்துக் கொண்டே சென்றது தவறான முடிவு என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ஓவர்களில் முடித்திருந்தால் அந்த அணி தற்போது இரண்டாவது இடத்தில் புள்ளி பட்டியலில் இருந்திருக்கும் என்றும் இந்த ரன் ரேட் பின்னால் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்..

மேலும் உங்களுக்காக...