தமிழகத்தின் 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: தமிழக அரசு அறிவிப்பு!

Published:

இந்து சமய அறநிலையத்துறை கீழ் இருக்கும் கோவில்களில் மதிய வேளைகளில் அன்னதானம் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மூன்று கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோவில்களில் தினமும் 200 நபர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்க தமிழக அரசு திட்டம் உள்ளது.

இந்த திட்டத்தை இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். எனவே இன்று முதல் ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தானங்களில் சிறந்தது அன்னதானம் என்பதை அடுத்து அன்னதானம் செய்வதால் பல ஏழை எளிய மக்கள் பசியாறுவார்கள் என்றும் அதனால் இந்த திட்டத்தை அனைத்து கோவில்களுக்கும் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...