நண்பர்களிடம் இருந்து பணம்.. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி கடிதம்..!

Published:

நண்பர்களிடமிருந்து பணம் வாங்கி செலவு செய்யும் அண்ணாமலை மீது வருமான வரி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கலாநிதி வீராசாமி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் முதலமைச்சர். முக ஸ்டாலின் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் சகோதரி கனிமொழி உட்பட திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அண்ணாமலையின் இந்த பட்டியல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

nirmala sitharaman 07 1504778778

திமுக மட்டும் இன்றி அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்களின் சொத்து பட்டியலையும் வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியதற்கு  அதிமுகவினர் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர். திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் என்பதும் அவரை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கனிமொழி எம்பி அண்ணாமலை மீது வழக்கு தொடர இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் அண்ணாமலை அளித்த பேட்டியில் தன்னுடைய வீட்டு வாடகை உட்பட அனைத்து செலவுகளுக்கும் நண்பர்கள் தான் கொடுத்து உதவுகின்றனர் என்று கூறினார். இதனை அடுத்து வருமான வரி சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.

நண்பர்களிடம் இருந்து மாதம் 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரை வீட்டு செலவுக்கு பணம் பெறுவதாக அண்ணாமலை கூறியுள்ளார் என்றும் எனவே வருமான வரிச் சட்டத்தின் மீது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். இந்த கடிதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் உங்களுக்காக...