திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா காங்கிரஸ்? தவெக + காங்கிரஸ் + தேமுதிக + பாமக + மதிமுக = ஆட்சி.. அதிர்ச்சியில் திமுக..!  

2026 ஆம் ஆண்டு தேர்தல் வித்தியாசமாக இருக்கும் என்று ஏற்கனவே அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ள நிலையில், தற்போது இருக்கும் இரண்டு கூட்டணிகளில் மாற்றம் நடைபெறலாம் என்றும், எந்தக் கூட்டணியும் தேர்தல் வரை உறுதியாக இருக்கும்…

alliance 1

2026 ஆம் ஆண்டு தேர்தல் வித்தியாசமாக இருக்கும் என்று ஏற்கனவே அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ள நிலையில், தற்போது இருக்கும் இரண்டு கூட்டணிகளில் மாற்றம் நடைபெறலாம் என்றும், எந்தக் கூட்டணியும் தேர்தல் வரை உறுதியாக இருக்கும் என்று சொல்ல முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, திமுக கூட்டணி மிகவும் வலுவாக இருப்பதாகவும், அந்த கூட்டணியில் இருந்து கட்சிகள் விலக வாய்ப்பே இல்லை என்றும், இது வெற்றிக் கூட்டணியாக இருக்கிறது என்றும் அரசியல் பார்வையாளர்கள் சொல்லி வருகின்றனர்.

ஆனால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கடைசி நேரத்தில் தங்களுக்கு போதுமான தொகுதிகள் கிடைக்காத அதிருப்தியில் வெளியே வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அந்தக் கட்சி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்தால், அந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி கூட்டணியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ராஜ்யசபா தொகுதி கொடுக்காததால் அதிருப்தியில் இருக்கும் வைகோவும் அதிமுக அல்லது தமிழக வெற்றிக்கழகக் கூட்டணிக்குச் செல்வார் என்றும் கூறப்படுகிறது.

எனவே, காங்கிரஸ் மட்டும் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் இணைந்தால், தவெக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய இந்த ஐந்து கட்சிகள் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கூட்டணிகளும் முதல் முறையாக முறியடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இது எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியம் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.