பாஜகவுடன் கூட்டணி.. தோனி பாணியில் ராஜதந்திரமாக  காய் நகர்த்தும் எடப்பாடி..!

  சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா?” என்ற கேள்விக்கு, “ஆறு மாதம் கழித்து பொறுத்திருந்து பாருங்கள்” என்று பதிலளித்தார். மேலும், திமுகவுக்கு எதிரான கொள்கைகளை…

eps annamalai

 

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா?” என்ற கேள்விக்கு, “ஆறு மாதம் கழித்து பொறுத்திருந்து பாருங்கள்” என்று பதிலளித்தார். மேலும், திமுகவுக்கு எதிரான கொள்கைகளை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைப்போம் என்றும் தெரிவித்தார்.

இதனை வைத்து, பாஜகவை அதிமுக தனது கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஆனால், மிகவும் ராஜதந்திரமாக, அதே நேரத்தில் கவனமாக தனது வார்த்தைகளை தேர்ந்து எடுத்துள்ளார் எடப்பாடி. பாஜகவுடன் கூட்டணி குறித்து அவர் நேரடியாக எந்த உறுதிப்பாடும் தெரிவிக்கவில்லை. மேலும், அந்த எண்ணத்திலேயே அவர் இல்லை.

ஆனால், மத்திய அரசிலிருந்து வரும் நெருக்கடிகளை சமாளிக்கவும், தேர்தல் வரை காலத்தை ஓட்டவும், கடைசி நேரத்தில் திடீரென “பாஜகவுடன் கூட்டணி இல்லை” என்று அறிவிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, சிலர் ஒரு கிரிக்கெட் சம்பவத்துடன் இதை ஒப்பிடுகின்றனர். சிஎஸ்கே கேப்டன் தோனி, ஒரு போட்டியில் பியூஸ் சாவ்லாவை அணியில் தேர்வு செய்தார். எதிரணியினர், அவரது பந்துகளை எளிதாக அடிக்கலாம் என கருதி மற்ற பவுலர்களின் பந்துகளை பெரிய அளவில் அடிக்காமல் விளையாடினர். ஆனால், கடைசி வரை தோனி சாவ்லாவுக்கு பௌலிங் கொடுக்கவே இல்லை. இதனால், எதிரணியினர் ஏமாந்தனர்.

அதே போல், எடப்பாடி பழனிசாமி, கடைசி வரை “பாஜகவுடன் கூட்டணி ஏற்படும்” என நாடகம் ஆடி, இறுதியில் அதிரடியாக “பாஜகவுடன் கூட்டணி இல்லை” என அறிவிக்க இருக்கிறார் என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த தேர்தலைப் பொருத்தவரை, “பாஜகவுடன் கூட்டணி இல்லை” என்பதை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்துள்ளதாகவும், ஆனால் அதை வெளிப்படையாக இப்போதைக்கு தெரிவிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.