தனிநபர் கடன், கிரெடிட் கார்டு போன்ற அன்-செக்யூரிட் லோன்களை வாரிசுகள் கட்ட தேவை இல்லை

சென்னை: பர்சனல் லோன், கிரெடிட் கார்டு போன்ற அன்-செக்யூரிட் லோன்களை வாரிசுகள் கட்ட தேவை இல்லை என பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். தனிநபர் கடன் மற்ற கடன்களை விட அதிக வட்டிவிகிதம்…

Inheritors are not required to pay unsecured loans like personal loan, credit card etc

சென்னை: பர்சனல் லோன், கிரெடிட் கார்டு போன்ற அன்-செக்யூரிட் லோன்களை வாரிசுகள் கட்ட தேவை இல்லை என பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

தனிநபர் கடன் மற்ற கடன்களை விட அதிக வட்டிவிகிதம் உள்ள கடன் என்றாலும் அவ்வளவு எளிதாக வாங்கிவிட முடியாது. ஏனெனில் இந்த கடன் என்பது ஒருவரின் நன்னடத்தை அடிப்படையில் தரப்படுகிறது. நல்ல நிறுவனத்தில் வேலை செய்து அங்கு நல்ல சம்பளம் வாங்குவோருக்கு மட்டுமே கடன் தருவதை நிறுவனங்கள் விரும்புகின்றன.

எனினும் தனிநபர் கடனை திரும்பி செலுத்த தகுதி உடையவரா என்பதை அறிய சில தகுதிகளையும் நிர்ணயித்துள்ளன. நல்ல சம்பளம், வேலை செய்யும் நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஓராண்டாவது வேலை செய்திருக்க வேண்டும், மூன்று மாத சம்பள ஸ்லிப், வேலை செய்யும் நிறுவனம் வங்கிகளின் லிஸ்ட் பட்டியலில் உள்ளனா என்பது போன்ற தகுதிகள் கட்டாயம். கூடுதலாக எந்த கடனும் அவருக்கு இருக்கக்கூடாது சிபிஸ்கோர் சிறப்பாக இருக்க வேண்டும். ஏற்கனவே வங்கிகளில் கடன் வாங்கி திரும்பி செலுத்தாதவர்கள் என்றால், அல்லது அடிக்கடி இஎம்ஐயை ஒழுங்காக காட்டாமல் அபராதம் கட்டியவர் என்றாலும் வங்கிகள் பர்சனல் லோனை தருவதில்லை..

அதேநேரம் ஏற்கனவே கடன் வாங்கி அந்த கடனை சிறப்பாக செலுத்தி சிபிஸ் ஸ்கோரை அருமையான பராமரிப்பவர்களுக்கு எந்த ஆவணங்களும் இன்றி, டிஜிட்டலில் சில நிமிடங்களில் கடன் தொகையை குறைந்த வட்டியில் வங்கிகள் தருகின்றன. அதாவது கடனை சரியான முறையில் திரும்ப செலுத்தும் நபர்களையே வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் குறிவைத்து கடன் தருகின்றன. அவர்களின் சிபில் ஸ்கோர் மட்டுமே அருமையாக இருக்கும்.

அதேநேரம் வங்கிகள் முன்பைவிட இப்போது பர்சனல் லோனை மிகவும் கவனமாக இதை கையாளுகின்றன. பர்சல் லோன் எடுப்பவர்களுக்கு இன்சூரன்ஸை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கடனை கட்டாமல் விட்டால், அதற்கான தனிநபரின் பின்னால் அலையாமல், காப்பீடு நிறுவனங்கள் மூலம் வசூல் செய்கின்றன எனினும் மரணம், உடல் நிலை ஊனம் தரும் அளவிற்கு மோசமான பாதிப்பு, நிறுவனத்தில் வேலை இழப்பு போனற் காரணங்களுக்கு மட்டுமே காப்பீடு நிறுவனங்கள் வங்கிகளுக்கு பணத்தை தரும்.

கிரெடிட் கார்டை பொறுத்தவரை ஓரளவு கணிசமான சம்பளம் வாங்கும் எல்லாருக்குமே கிடைக்கும் என்றாலும் அதற்கு வட்டி மிக அதிகம். கிட்டத்தட்ட கந்துவட்டி போல் தான் வட்டி இருக்கும் என்பதால், ஒரு மாதம் ஒழுங்காக கட்டாவிட்டால் கடும் பாதிப்பை சந்திப்பார்கள். கிரெடிட் கார்டில் பொருள் வாங்குபவர்கள் சரியான நேரத்தில் முழு பணத்தை திரும்ப செலுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால் வட்டி தாருமாறாகவே இருக்கும். தனிநபர் கடன் கிடைக்காதவர்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் தங்களுக்கு வேண்டிய பொருட்களை இஎம்ஐயில் எடுக்க முடியும். அதேபோல் தனிபர் கடனும் எளிதாக வாங்க முடியும்.

இதில் அறிய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன் போன்றவை பாதுகாப்பற்ற கடன் என்பதால், இந்த கடன்களை யார் வாங்கினார்களோ அவர்களிடம் மட்டுமே கேட்க முடியும். அவர்களின் வாரிசுகளிடமோ, மனைவியிடமோ திரும்ப செலுத்த சொல்லி வங்கிகளால் கேட்க முடியாது. இதுபற்றி பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, “உங்கள் குடும்பத்தினரோ அல்லது அம்மா, அப்பா வாங்கிய பர்சனல் லோனுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பாகும். எனவே தனிநபர் கடனை உங்கள் பெற்றோருக்கு தந்தது உங்கள் சம்பாத்தியத்தை வைத்து அல்ல..

அதேபோல் அந்த கடன் எதோ ஒரு பொருளை அடகு வைத்தோ தரவில்லை.. எனவே வங்கிகளிடம் நேராகவே நீங்கள் சொல்லாம். எங்கள் அப்பா அம்மா வாங்கிய கடனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. சட்ட ரீதியாக பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லுங்கள். அந்த பர்சனல் லோனை உங்கள் தலைமேல் சட்ட ரீதியாக கட்டவே முடியாது. தைரியமாக பேசுங்கள்.. பர்சனல் லோன் என்பது யார் வாங்கினாரோ அவர் மட்டுமே அதற்கு பொறுப்பு.. வீட்டில் உள்ளவர்களிடம் வசூலிக்க நிதி நிறுவனங்களால் அல்லது வங்கிகளால் முடியாது” என்றார்.