நேற்று ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருக்கு நினைவில் நிற்கும் ஒரு இரவு ஆனது, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்த்து அவர்கள் புதிய சாதனையை பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் டாப்-2 நிலையை உறுதி செய்தனர். இப்போது அவர்கள் இறுதி போட்டிக்கு செல்ல இரண்டு வாய்ப்புகளும் கிடைக்கும்.
பெங்களூரு அணி ஆறு விக்கெட்டுகள் மற்றும் எட்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் நேற்று லக்னோ அணியை வென்றது. ஆனால் ஆட்டம் வென்றதல்ல விஷயம் , அதில் விளையாடிய விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா இடையேயான முத்தமிடல் தான் மக்களின் கவனத்தை ஈர்த்தது.
பெங்களூரு வெற்றிக்கு பிறகு கோஹ்லி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார், இது அவருக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்தார். பெங்களூரு அணி வெற்றியால் அனுஷ்கா மிகவும் சந்தோஷமாக இருந்தார். அப்போது தான் வெற்றி களிப்பில் இருவரும் மாறி மாறி பிளையிங் கிஸ் கொடுத்து கொண்டனர். இது ஆட்டத்தை விட சுவாரஸ்யமாக இருந்தது. இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆரம்பம் முதலே கோஹ்லி ஆட்டம் மீது அனுஷ்கா மிகப்பெரிய நம்பிக்கை இருந்து வந்தது.. ஆகவே பெங்களூரு வெற்றி கண்டபோது அனுஷ்காவின் சந்தோஷம் ஆச்சரியம் அல்ல.
228 ரன்களை வெற்றி பெற இலக்கு என்ற நிலையில் விராத் கோஹ்லி அற்புதமாக தொடக்கத்தை கொடுத்தர். அவர் 50 ரன்கள் அடித்தார், ஆனால் அதன்பின் சில பந்துகளுக்குப் பிறகு அவுட் ஆனார். 30 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து பெரிய வெற்றிக்கான தளத்தை அமைத்தார். ஆனால் நாயகனாக ஜிதேஷ் சர்மா மின்னினார். 33 பந்துகளில் 85 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினார். அவரது போட்டியில் ஆறு சிக்ஸ் மற்றும் எட்டு ஃபோர்களும் இருந்தன.
“என் எண்ணங்களை வெளிப்படுத்த முடியவில்லை, நான் தற்போதைய தருணத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். விராட் அவுட் ஆனபோது நான் ஆட்டத்தை ஆழமாக கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். என் வழிகாட்டி தினேஷ் கார்த்திக் என்னிடம் இருந்த திறனால் எந்த சந்தர்ப்பத்திலும் ஆட்டத்தை முடிக்க முடியும்,” என்று நம்பிக்கை கொடுத்தார் என்று தெரிவித்தார்.
https://x.com/RCB_HIvv3/status/1927442305054634308