இந்த அறிவாளிகளின் பிரச்சனையே இதுதான்.. வாயை வச்சுகிட்டு சும்மா இருக்குறதுல்ல.. ’தக்லைஃப்’ விழாவில் கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு..!

கமல் ஹாசனின் தக்லைஃப் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், அவருடைய சர்ச்சைக்குரிய பேச்சால் இந்த படத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு அன்று நடந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் கன்னட…

kamalhaasan

கமல் ஹாசனின் தக்லைஃப் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், அவருடைய சர்ச்சைக்குரிய பேச்சால் இந்த படத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று நடந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளை ஒப்பிட்டு, கன்னடம் தமிழிலிருந்து தோன்றியது என்று கூறினார். இது கன்னட மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, தற்போது கர்நாடகாவில் தக்லைஃப் படத்தின் வெளியீட்டை தடை செய்யுமாறு கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

மே 25-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆடியோ வெளியீட்டில் கமல் ஹாசன் தனது படம், துணை நடிகர்கள் மற்றும் குழுவைப் பற்றி பேசினார். அந்நிலையில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். கமல் ஹாசன் பேச்சை தொடங்கும்போது, அவர் “உயிரே உறவே தமிழ்” என்று கூறி, சிவராஜ் குமாரை வேறு மாநிலத்தில் வாழும் தன் குடும்பத்தாராக குறிப்பிட்டு, ‘என் உயிரும் என் குடும்பமும் தமிழ்’ என்று சொன்னேன். உங்களுடைய மொழி கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது. ஆகவே நீங்களும் அதே வரிசையில் சேர்கிறீர்கள்” என்று கூறினார்.

இந்த வீடியோ வைரலாகியதுடன், பல இணைய பயனர்கள் அவரை திருத்தி, கன்னடம் தமிழின் சகோதர மொழியாகும்; தமிழிலிருந்து பிறந்ததல்ல என்று பதிலளித்தனர். சில கன்னட அமைப்புகள் ‘தக்லைஃப்’ படத்தை கர்நாடகாவில் வெளியிட தடையை கேட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ‘தகலைஃப்’ திரைப்படம் பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசனின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு மணிரத்னம் அவர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளதாக கூறப்படுகிறது.