கொரோனா மீண்டும் பேரழிவை ஏற்படுத்தும்.. எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் ஜப்பான் பாபா அதிர்ச்சி தகவல்..!

  இந்தியா உட்பட சில நாடுகளில் கோவிட் நோய் தொற்று மீண்டும் எழுச்சி அடைந்து கொண்டிருக்கும் நிலையில், பிரபல ஜப்பானிய மங்கா கலைஞரும் ஜப்பானின் “பாபா வங்கா”வாக கருதப்படும் ரியோ தாட்சுகி பல ஆண்டுகளுக்கு…

japan baba

 

இந்தியா உட்பட சில நாடுகளில் கோவிட் நோய் தொற்று மீண்டும் எழுச்சி அடைந்து கொண்டிருக்கும் நிலையில், பிரபல ஜப்பானிய மங்கா கலைஞரும் ஜப்பானின் “பாபா வங்கா”வாக கருதப்படும் ரியோ தாட்சுகி பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கணிப்பு மீண்டும் மக்களின் கவனத்தை பெற்றுள்ளது. அவர் 2030ஆம் ஆண்டு ஒரு உயிர்கொல்லி வைரஸ் மீண்டும் தோன்றும் என கணித்துள்ளார்.

கோவிட் , இளவரசி டயானா மரணம், பிரபல பாடகர் ஃபிரெடி மெர்குரியின் மரணம் உள்ளிட்ட பல நிகழ்வுகளை மிகச் சரியாக வங்கா முன்கூட்டியே கணித்ததாக கூறப்படும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு உயிர்கொல்லி வைரஸ் மீண்டும் பரவுவதாக கணித்துள்ளார்.

ஜப்பானிய நாவலாசிரியர் ரியோ தாட்சுகி 1999 ஆம் ஆண்டு “The Future as I see It” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதில், அவர் தூங்கும்போது கனவுகளில் நடந்த சில விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. “2020-இல் அடையாளம் தெரியாத ஒரு வைரஸ் தோன்றும்; ஏப்ரலில் உச்சத்தில் எட்டிய பின் அது மறையும்; ஆனால் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் வரும்” என அவர் கூறினார். இது கோவிட் என நம்பப்படுகிறது. .

தாட்சுகியின் கணிப்புப்படி, கோவிட் இன்னும் மோசமான விளைவுகளுடன் திரும்பும். 1999ம் ஆண்டு அவர் எழுதிய கட்டுரைகளின் படி, இந்த வைரஸ் மீண்டும் கடுமையாக தாக்கி, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி, உலக சுகாதார அமைப்புகளை மற்றுமொரு முறை குழப்பி விடும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பாபா வங்கா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையிலான கடலுக்கடியில் ஒரு பெரிய பிளவு உருவாகி, 2025 ஜூலை மாதத்தில் பேரழிவான சுனாமியை ஏற்படுத்தும் எனவும் கணித்துள்ளார்.

இந்த கணிப்பு, பூகம்பங்களுக்குப் பெயர் பெற்ற ஜப்பானில் மக்களின் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவான சுனாமியை விட மூன்று மடங்கு பெரியதாக இந்த சுனாமி இருக்கும் என அவர் கணித்துள்ளார்.

ஜப்பானின் தெற்கு பகுதியில் கடல் “கொதிக்கும்” காட்சியை அவர் கனவில் கண்டதாகவும், அதுவே இந்த பேரழிவுக்கு காரணமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.