SRH நடராஜன் குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல தோனி..!

Published:

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தற்போது ஹைதராபாத் அணியில் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் நிலையில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தல தோனி நேற்று இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஹைதராபாத் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவர் நடராஜன் என்பதும் அவரது யார்க்கர் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் அவர் கடந்த சில போட்டிகளில் சரியாக பந்து வீசாரததை அடுத்து நேற்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

natarajan family1 1இருப்பினும் அவர் தனது அணி சென்னையில் விளையாடியதை அடுத்து தனது குடும்பத்தினருடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உட்கார்ந்து போட்டியை பார்த்து ரசித்தார் என்பதும் அவ்வப்போது அவரை கேமரா அவரை காண்பித்த போது ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. சென்னை மைதானத்தை பொருத்தவரை இதுவரை சென்னை அணியை ஹைதராபாத் அணியை வீழ்த்தியதில்லை என்ற சாதனை தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று போட்டி முடிவடைந்ததும் நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினரை தல தோனி சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இது குறித்த வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.

மேலும் உங்களுக்காக...