முதலமைச்சர் குடும்பம் அருகே அஜித் குடும்பம்.. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஆச்சரியம்..!

Published:

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று தனது குடும்பத்தினர்களுடன் சென்னை மற்றும் ஹைதராபாத் ஐபிஎல் போட்டியை பார்க்க சேப்பாக்கம் மைதானத்தில் வருகை தந்து இருந்த நிலையில் அவர் அமர்ந்திருந்த இருக்கை அருகே அஜித் குடும்பத்தினர் அமர்ந்திருந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

aadvik

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை பார்க்க பல அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வருகை தந்து இருந்தனர் என்பதும் அவ்வப்போது தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் அவர்களது காட்சி தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது மனைவி, மருமகள் உள்பட குடும்பத்தினரிடம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டியை பார்க்க வருகை தந்திருந்தார். முதலமைச்சரின் குடும்பத்தின் அருகில் தான் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் தனது குழந்தைகளுடன் இருந்தார் என்பதும் அவர் இந்த போட்டியை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

aadvik and cm1

போட்டியின் நேரடி ஒளிபரப்பை கவர் செய்த கேமராமேன்கள் அவ்வப்போது அஜித் குடும்பத்தினரையும் முதலமைச்சர் குடும்பத்தினரையும் கவர் செய்ததை அடுத்து ரசிகர்கள் அதை பார்த்து பரவசமடைந்தனர். குறிப்பாக அஜித் மகன் ஆத்விக்கை அடிக்கடி கேமராமேன் காண்பித்தது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போட்டியை காண தனுஷ், பிரியங்கா மோகன் உட்பட பல திரையுலக பிரபலங்களும் அமைச்சர் அன்பில் மகேஷ் உட்பட பல அரசியல் பிரபலங்களும் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...