என்ன ஆச்சு ரஷித் கானுக்கு? ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் ரன்களை வாரி வழங்கிய பரிதாபம்..!

Published:

ரஷித்கான் களத்தில் பந்து வீச வந்தாலே பேட்ஸ்மேன்கள் அலறுவார்கள் என்பதும் அவரது பந்துவீச்சில் கண்டிப்பாக விக்கெட்டுகள் விழுவது உறுதி என்பதும் தெரிந்ததே. குறிப்பாக ஐபிஎல் போட்டியில் அவரது பந்துவீச்சு அபாரமாக இருக்கும் என்பதும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை ஒவ்வொரு இன்னிங்ஸிலும் வீழ்த்துவது அவர் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ரஷீத் கான் நான்கு ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட்  கூட வீழ்த்தவில்லை என்பதும் அது மட்டும் இன்றி 54 ரன்களை வாரி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ashid khan1

இன்றைய கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து கொல்கத்தா அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்த நிலையில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தனர். ரமனுல்லா குர்பஸ் அபாரமாக விளையாடி 81 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் ரஸல் அதிரடியாக விளையாடி 34 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் குஜராத் பந்துவீச்சை பொறுத்தவரை ஷமி மூன்று விக்கட்டுகளையும் நூர் அகமது, ஜோஷ் லிட்டில் தலா இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர். நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித்கான் இன்று ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை என்பது மட்டுமின்றி அவரது பந்துவீச்சை கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் பொளந்து கட்டினர் என்பதும் அவரது நான்கு ஓவரில் நான்கு சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என மொத்தம்  54 ரன்கள் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வர்ணனையாளர்கள் ரஷீத் கானுக்கு என்ன ஆச்சு என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...