ஒரே மோதிரத்தில் 50,000 வைரங்கள்.. கின்னஸ் சாதனை படைத்த மோதிரத்தின் விலை என்ன தெரியுமா?

Published:

ஒரே மோதிரத்தில் 50 ஆயிரத்துக்கு அதிகமான வைரங்கள் பதிக்கப்பட்ட நிலையில் அதன் விலை சுமார் 6 கோடிக்கு மேல இருக்கும் என்றும் இந்த மோதிரம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மோதிரம் என்பது பலவகையாக இருக்கும் என்பதும் தங்கம் வெள்ளி வைரம் உள்ளிட்ட பல உலோகங்களில் மோதிரம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் பார்த்திருக்கிறோம். மேலும் கின்னஸ் சாதனை செய்வதற்காக பல வித்தியாசமான மோதிரங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மும்பையை சேர்ந்த நகைக்கடை வியாபாரி உருவர் 50 ஆயிரத்து 907 வைரங்களை கொண்டு ஒரே ஒரு மோதிரத்தை செய்துள்ளார்.

அவர் தனது நகை நிறுவனத்தை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக செய்த இந்த மோதிரம் தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் உலக சாதனை அமைப்பாளர்கள் இதனை நேரில் பார்த்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற ஒப்புக்கொண்டுள்ளனர்.

மும்பை சேர்ந்த எச்கே டிசைன்ஸ் மற்றும் அரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நகைக்கடை தான் இந்த சாதனையை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மறு சுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் இந்த வைரம் உருவாக்கப்பட்டது என்றும் தங்கம் மற்றும் வைரங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த வைரம் சுமார் 6 கோடிக்கும் மேல் மதிப்புள்ளது என்று கூறப்படுகிறது. இந்த மோதிரத்திற்கு யூடிரியா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேல் பக்கமாக பார்த்தால் பட்டாம்பூச்சியுடன் சூரியகாந்தி வடிவம் இந்த மோதிரம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோதிரம் குறித்து எச்கே டிசைன்ஸ் நிர்வாக இயக்குனர் கூறுகையில் ’கனவுகள் நனவாகாது என்று தான் பலர் நம்புவார்கள், ஆனால் எனது கனவு நினைவாகிவிட்டது. இப்படி ஒரு மோதிரத்தை தயார் செய்ய வேண்டும் என்று எனது பல நாள் கனவாக இருந்த நிலையில், தற்போது அது நனவாகி உள்ளது. என் வாழ்க்கையில் நான் செய்த ஒரு மிகப்பெரிய சாதனையாக இதை கருதுகிறேன். இந்த சாதனை ஒரு காலத்தில் முறியடிக்கப்படும் என்றாலும் தற்போதைக்கு இந்த சாதனை எனக்கு சொந்தமானது. இந்த மோதிரத்தை உருவாக்குவதன் மூலம் நாங்கள் சாதித்துள்ளோம் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களையும் லைக்ஸ்ளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 24 ஆயிரத்து 679 வைரங்களை கொண்டு மோதிரம் உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த புதிய சாதனை படைத்த மோதிரத்தில் 50 ஆயிரத்து 907 வைரங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...