அன்புள்ள விராத்.. இந்த மக்கள் அன்பு, பாசம் இல்லாதவர்கள்.. 4 வருடத்திற்கு முந்தைய ராகுல் காந்தியின் ட்வீட் இப்போது வைரல்..!

  பெங்களூர் அணி, 18 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில், அதை சந்தோஷமாக கொண்டாடிய கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபத்துதான் பெரும் சிக்கலாக மாறியுள்ளது. அந்த விபத்தில் 11 பேர்…

rahul virat

 

பெங்களூர் அணி, 18 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில், அதை சந்தோஷமாக கொண்டாடிய கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபத்துதான் பெரும் சிக்கலாக மாறியுள்ளது. அந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், விராட் கோலி உட்பட பெங்களூர் அணிக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

“இவ்வளவு அவசர அவசரமாக இந்த கொண்டாட்டத்தை நடத்த வேண்டுமா? இப்போது பலியான உயிர்களுக்கு யார் பதில் சொல்வது?” போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என்றும், ஆர்சிபி அணியை தடை செய்ய வேண்டும் என்ற ஹாஷ்டேக் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ராகுல் காந்தி பதிவு செய்த பழைய ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ட்வீட்டில்,

“அன்பான விராட், இந்த மக்கள் எல்லாம் அன்பு இல்லாததால் துன்பத்தில் இருக்கிறார்கள். அவர்களை மன்னியுங்கள், உங்கள் அணியை பாதுகாப்பீர்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த போது, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணியுடன் இந்தியா தோல்வியடைந்த பின், கோலிக்கும் அவரது அணிக்கும் கடுமையான விமர்சனங்கள் ஏற்பட்டன. பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியடைந்ததை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாததால், இந்திய அணியில் இருந்த ஷமி மீது மத ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கு கோலி கடும் கண்டனம் தெரிவித்தார். “மத அடிப்படையில் தாக்குதல் நடத்துவது இழிவான செயல்,” என்று அவர் தெரிவித்திருந்தார். உடனே அவருக்கு எதிராக பெரும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நேரத்தில்தான் ராகுல் காந்தி மேற்கண்ட ட்வீட்டை பதிவு செய்தார். “இன்றைய நேரத்திற்கும் இது பொருத்தமாக இருக்கிறது,” என்றும், “இப்போதும் விராட் கோலியை பலர் வேண்டுமென்றே குறை சொல்லி வருகிறார்கள்,” என்றும், “முன்கூட்டியே கணித்து இந்த ட்வீட்டை ராகுல் காந்தி பதிவு செய்திருக்கிறார்,” என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பெங்களூரு விபத்து விவகாரத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும், இன்னும் சில கைது நடவடிக்கைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கர்நாடக அரசு, இது குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.