அமெரிக்கா அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற உடன், அரசாங்கத்திறன் “மேம்பாட்டு பிரிவு” (DOGE) என்று அமைக்கப்பட்டது என்பதும், அதில் எலான் மஸ்க் தலைவராகவும், இணைத்தலைவராக விவேக் ராமசாமியும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், சில நாட்களில் விவேக் ராமசாமி அந்த பதவியில் இருந்து விலகினார். இந்த பதவியில் எலான் மாஸ் டாமினேட் செய்வதாகவும், அதுமட்டுமின்றி ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் பணி புரிய முடியாது என்பதால் தான் விவேக் ராமசாமி விலகியதாகவும் கூறப்பட்டது.
அப்போது அவர் எடுத்த முடிவு தவறானது என்று அமெரிக்கர்கள் பலர் விமர்சனம் செய்த நிலையில், தற்போது எலான் மஸ்க் அவர்களும் டிரம்ப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதை சுட்டிகாட்டி, “இப்போது தெரிகிறதா விவேக் ராமசாமி எவ்வளவு புத்திசாலி என்று? டிரம்ப்புடன் பணிபுரிய முடியாது என்பதை அப்போதே அவர் கணித்துள்ளார்” என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அதற்கேற்றாற் போல், விவேக் ராமசாமி தன்னுடைய சமூக வலைதளத்தில், தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, “இதற்காகத்தான் நாம் எல்லாம் செய்கிறோம், இவர்களுக்காகத்தான் நாம் எல்லாம் செய்கிறோம்” என்று கேப்ஷனாக பதிவு செய்திருந்தார். மேலும் தான் நிம்மதியாக இருப்பதை அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்த புகைப்படம் வைரலாகிய நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் உள்ள பதவியை தூக்கி எறிந்த விவேக் ராமசாமியின் முடிவுக்கு நெட்டிசன்க்ள் தற்போது பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், விவேக் ராமசாமி தற்போது ஒஹையோ மாநில கவர்னராக போட்டியிட போகிறார் என்றும், அதில் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.