கொஞ்சம் கூட அறிவே இல்லையா? தோல்வி அடைந்ததும் நடுவிரலை காட்டி அவமதித்த பாகிஸ்தான் வீராங்கனை.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

  ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனை ஒருவர், தான் தோல்வியடைந்த விரக்தியில், எதிரணி வீராங்கனைக்கு நடுவிரலை காட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி…

pakistan

 

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனை ஒருவர், தான் தோல்வியடைந்த விரக்தியில், எதிரணி வீராங்கனைக்கு நடுவிரலை காட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த மெஹ்விஷ் அலி, ஹாங்காங்கை சேர்ந்த ஜூனியர் ஸ்குவாஷ் வீராங்கனை சுங் ஒய் எல் என்பவரை எதிர்கொண்டார். இப்போட்டியில் மெஹ்விஷ் அலி 13-11, 5-11, 11-13, 4-11 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். போட்டி முடிந்ததும் மெஹ்விஷ் அலி நடந்து கொண்ட விதம்தான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தோல்வியின் விரக்தியில், மெஹ்விஷ் அலி தனது எதிரணி வீராங்கனையுடன் கை குலுக்க மறுத்ததோடு, அவருக்கு நடுவிரலை காட்டி அநாகரிகமாக நடந்துகொண்டார். இந்த செயலால் வெற்றி பெற்ற வீராங்கனை சுங் ஒய் எல் அதிர்ச்சியடைந்தார். மெஹ்விஷ் அலியின் இந்த செயல் ஏன் என்று அவருக்கு புரியவே இல்லை.

மெஹ்விஷ் அலியின் இந்த செயலுக்கு உலகம் முழுவதும் உள்ள ஸ்குவாஷ் ரசிகர்கள் மத்தியில் கடுமையான கண்டனங்கள் குவிந்துள்ளன. பலரும் விளையாட்டு வீரர்களுக்குரிய பண்பு இல்லாமல் அவர் நடந்துகொண்டதை கடுமையாக விமர்சித்தனர்.

ஒரு பயனர், “இதுபோன்ற சர்வதேச மேடையில் இத்தகைய செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. வெற்றி தோல்வி இரண்டிலும் பண்புடன் நடந்துகொள்வதுதான் உண்மையான விளையாட்டு வீரன். இந்த பண்பு இவரிடம் துளி கூட இல்லை. கேமராவில் பதிவானது நல்லது, இல்லையென்றால் வழக்கம் போல் இந்த கதை திசை திருப்பப்பட்டிருக்கும்” என்று காட்டமாக கருத்து தெரிவித்தார்.

மற்றொருவர், “விளையாட்டின் முடிவு எதுவாக இருந்தாலும், எதிராளியை அவமதிப்பது மோசமான விளையாட்டு தனத்தைக் காட்டுகிறது, கொஞ்சம் கூட அறிவே இல்லையா?” என்று கூறினார். மேலும் சிலர், இந்த வீராங்கனைக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான விளையாட்டு உறவுகள் மீண்டும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

ஹாக்கி ஆசிய கோப்பைக்காக பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியாவுக்குப் பயணம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், தற்போது இந்தியாவுக்கு பயணம் செய்வது தங்கள் அரசின் முடிவை பொறுத்தது என்று பாகிஸ்தானே கூறியுள்ளது. இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான விளையாட்டு பரிமாற்றங்களை மேலும் சிக்கலாக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

https://x.com/Navrang/status/1940995908898115722