ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.. எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட விஜய்.. இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்..!

அதிமுக – பாஜக கூட்டணியில் நடிகர் விஜய் சேரப் போகிறார் என்றும், அப்படி விஜய் வந்தால் பாஜகவை வெளியேற்ற கூட அதிமுக தயங்காது என்றும், விஜய்க்கு துணை முதல்வர் பதவி உட்பட சில பதவிகள்…

vijay 2

அதிமுக – பாஜக கூட்டணியில் நடிகர் விஜய் சேரப் போகிறார் என்றும், அப்படி விஜய் வந்தால் பாஜகவை வெளியேற்ற கூட அதிமுக தயங்காது என்றும், விஜய்க்கு துணை முதல்வர் பதவி உட்பட சில பதவிகள் கொடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையில், இது எல்லாமே வதந்தி என்பதை இன்றைய ஒரே ஒரு அறிவிப்பின் மூலம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உறுதி செய்துவிட்டார்.

கொள்கை எதிரியான பாஜகவுடனும், அதிமுக மற்றும் திமுகவுடனும் கூட்டணி இல்லை என்று அவர் உறுதியாகவும் இறுதியாகவும் சொல்லிவிட்டார். எனவே, இரண்டு திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லை, பாஜகவுடனும் கூட்டணி இல்லை என்பதை அவர் தெளிவாக சொல்லிவிட்டதால், தமிழகத்தில் நான்கு முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது:

அதிமுக கூட்டணி

திமுக கூட்டணி

தமிழக வெற்றி கழகம் கூட்டணி

சீமானின் நாம் தமிழர் கூட்டணி

இதில், சீமான் கட்சி வழக்கமாக 5 முதல் 8 சதவீதம் வரைதான் வாக்குகள் பெறும் என்பதும், அதுவும் விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாதிக்கு மேல் வரும் தேர்தலில் குறைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. எனவே, ஆட்சி அமைக்கும் போட்டியில் இருந்து நாம் தமிழர் கட்சியை ஒதுக்கிவிடலாம் என்பதுதான் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. வழக்கம் போல, எதிர்வரும் 234 தொகுதிகளிலும் சீமான் கட்சி டெபாசிட் வாங்குவதே கடினம் தான் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, உண்மையான போட்டி அதிமுக, திமுக, மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையேதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணியில் இதுவரை எந்த ஒரு கட்சியும் சேர்வதாக உறுதி செய்யவில்லை. பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் திமுக கூட்டணியில் இடம்பெற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒருவேளை விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறினாலும், அது பாஜக இருக்கும் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை. அதேபோல், மதிமுக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் தனித்து போட்டியிடத்தான் திட்டமிட்டுள்ளதாகக்கூறப்படுகிறது. எனவே, அதிமுக – பாஜக கூட்டணி பலவீனமாக இருப்பதால், உண்மையான போட்டி திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையேதான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் ஆரம்பம் முதலே தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார் என்பதால், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக விஜய்யை மக்கள் பார்க்க தொடங்கிவிட்டனர். இதுவரை வாக்குச்சாவடிக்கு செல்லாதவர்கள், முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள், இளைஞர்களின் வாக்குகள், சிறுபான்மையினரின் ஒரு பகுதி வாக்குகள், வன்னியர் மற்றும் பட்டியல் இனத்தவர் என இரண்டும் சேர்ந்த வாக்குகள் என ஒரு பெரிய வாக்கு சதவீதத்தை விஜய் பெறுவார் என்றும், கண்டிப்பாக விஜய் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தொகுதிகளை பெறுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

மொத்தத்தில், இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என்றும், அது மட்டுமின்றி, 50 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிடக் கட்சி இல்லாத ஆட்சி அமைய தமிழகத்தில் முதல்முறையாக ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.