ஐபிஎல் முடிவுகளை தீர்மானிக்கிறாரா தொழிலதிபர்? தலைவிரித்தாடும் சூதாட்டம்.. பிசிசிஐ எச்சரிக்கை..!

  கிரிக்கெட் விளையாட்டுக்கும் சூதாட்டத்திற்கும் பல ஆண்டுகளாக தொடர்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் சூதாட்டம் நடந்து வருவதாகவும் சில போட்டிகளின் முடிவையே மாற்ற சூதாட்டக்காரர்கள் முயற்சித்துக்காகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல்…

bcci

 

கிரிக்கெட் விளையாட்டுக்கும் சூதாட்டத்திற்கும் பல ஆண்டுகளாக தொடர்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் சூதாட்டம் நடந்து வருவதாகவும் சில போட்டிகளின் முடிவையே மாற்ற சூதாட்டக்காரர்கள் முயற்சித்துக்காகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள், அணியின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் உட்பட அனைவருக்கும் பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவு தற்போது ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அனைத்து 10 அணிகளுக்கும், அவர்களின் உரிமையாளர்களுக்கும் முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த, ஒரு பிரபல தொழிலதிபர், போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் பிற உறுப்பினர்களை சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முயற்சித்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணி உரிமையாளர்கள், வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த தொழிலதிபரிடம் இருந்து விலகி இருக்கவும், அவரிடம் தொடர்பு இருந்தால் உடனடியாக பிசிசிஐக்கு தகவல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தொழிலதிபர், முன்பு ஊழலில் ஈடுபட்ட பந்தயக் கும்பல்களுடன் நேரடி தொடர்புடையவர். அவர், ரசிகராக நடித்து, அணியினருடன் நெருக்கமாக பழக முயற்சித்து, ஹோட்டல்களிலும் போட்டி இடங்களிலும் வீரர்களை அணுக முயற்சித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அந்த தொழிலதிபர், வீரர்கள் மற்றும் பணியாளர்களிடம் நட்பு பாராட்டி, தனிப்பட்ட விருந்துகளுக்கு அழைத்தும் இருக்கிறார். மேலும், அணியினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கூட பரிசுகள் வழங்கி ஈர்க்க முயன்றிருக்கிறார். உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் என அனைவரிடமும் அவர் அணுகல் முயற்சி செய்துள்ளார். எனவே அவருடன் யாராவது தொடர்பு கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் எஸ். ஸ்ரீசாந்த், அஜித் சந்திலா மற்றும் அங்கேத் சவான் ஆகியோர் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் கைது செய்யப்பட்டு, பிசிசிஐயால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 2019-இல், இந்திய உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்தின் தடை உத்தரவை நீக்கியது. பின்னர் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், உரிமையாளர்கள் பந்தய வழக்கில் ஈடுபட்டதாக கூறப்பட்டதால், இரண்டு வருடங்களுக்கு தடை செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.