இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. Work From Home பணியில் செய்த மோசடியை கண்டுபிடித்த AI டெக்னாலஜி..!

  பெரும்பாலும் Work From Home பணியில் இருப்பவர்கள் தாங்கள் ஒப்புக்கொண்ட நேரத்தில் வேலை செய்வதில்லை என்றும் சில மணி நேரம் வேலை செய்துவிட்டு முழு நாள் வேலை செய்ததாக கணக்கு காட்டி சம்பளம்…

software job

 

பெரும்பாலும் Work From Home பணியில் இருப்பவர்கள் தாங்கள் ஒப்புக்கொண்ட நேரத்தில் வேலை செய்வதில்லை என்றும் சில மணி நேரம் வேலை செய்துவிட்டு முழு நாள் வேலை செய்ததாக கணக்கு காட்டி சம்பளம் வாங்கிக் கொள்கிறார்கள் என்றும் அதனால் தான் பெரும்பாலான நிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தி வருகின்றன என்றும் கூறப்படுகிறது/

அந்த வகையில் AI டெக்னாலஜி ஒரு ஊழியரின் Work From Home பணியை தவறாக பயன்படுத்தியதை கண்டுபிடித்து உரிமையாளரிடம் போட்டுக் கொடுத்த நிலையில் அந்த ஊழியர் தற்போது வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராமானுஜ் முகர்ஜி, ஒரு பணியாளரின் வேலை மோசடியை AI தொழில்நுட்பத்தின் உதவியால் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளார். அவர் தலைமையிலுள்ள Law Sikho நிறுவனம் Work From Home வேலைக்கான ஆட்களை நியமித்த நிலையில் ஊழியரின் செயல்திறனைப் பார்த்து, வேலை செய்யும் நேரம், வேலையின் தன்மையை கண்கிடுமாறு AI இடம் கேட்டபோது, அந்த ஊழியர் தினமும் சில மணி நேரம் மட்டுமே வேலை செய்துள்ளார் என்பதை AI டெக்னாலஜி கண்டுபிடித்தது.

குற்றம்சாட்டப்பட்ட ஊழியர் கடந்த நவம்பரில் தான் கடைசியாக இலக்கை அடைந்தார். அதன் பிறகு இரண்டு மாதங்களாக அவர் இலக்கின் 30% மட்டுமே செய்துள்ளார். அந்த ஊழியரின் தினசரி வேலை நேரம் இலக்குடன் ஒத்துப்போகவில்லை. இது ஒரு பகுதி நேர வேலை போன்று தெரிகிறது. ஒரு நாள் கூட அவர் ஒரு முழு நாளின் வேலை நேரத்தில் வேலை ச் செயாவ்வில் என்றும் அவரது வேலை முறைகள் ஒழுங்கின்றி இருந்தது என்றும் AI கண்டுபிடித்து தனது முதலாளியிடம் ஆதாரத்துடன் தெரிவித்தது.

மேலும், அந்த ஊழியர் தன் ரெஸ்யூமேயில் போலி தகவல்கள் கொடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. Suraasa என்ற நிறுவனத்தில் 2 வருடம் பணிபுரிந்ததாக LinkedIn-இல் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், அந்த நிறுவனத்திலிருந்து 6 மாதங்களில் வேலைவிலக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அந்த ஊழியர் போலி ஆஃபர் லெட்டர்கள், பே சிலிப்கள் மற்றும் அனுபவ சான்றுகள் கொடுத்து வேலை பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் Work From Home கலாச்சாரம் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும், இதுபோன்ற சிலரால் தான் ஒழுங்காக வேலை செய்யும் Work From Home பாணியாளர்களுக்கும் சிக்கல் ஏற்படுவதாக கூறப்பட்டு வருகிறது.

Work From Home பணியில் இருப்பவர்களை தற்போது AI டெக்னாலஜி மூலம் அவர்கள் செய்யும் வேலையை கண்டுபிடிக்கும் வசதி வந்து விட்டதால் மனசாட்சியுடன் வேலை செய்தால் மட்டுமே வேலையில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் இல்லையென்றால் வேலை நீக்கம் செய்யப்படும் அபாயம் இருப்பதை Work From Home பணியாளர்கள் உணர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது