இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்பது இன்றைய ஜெனரேஷன் மக்களிடம் மிக மோசமாக பரவி வருகிறது என்பதும் உயிரை கூட பொருட்படுத்தாமல் எடுக்கப்படும் இன்ஸ்டாகிராமில் பல உயிர்களை பலி வாங்கியது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் கங்கை நதியின் ரீல்ஸ் எடுக்கும் போது பெண் ஒருவருக்கு ஏற்பட்ட விபரீத வீடியோ இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த துயரமான சம்பவம் ஏப்ரல் 15-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் நடந்ததாக கூறப்படுகிறது. ஒரு த பெண் தனது குடும்பத்துடன் உத்தர்காசி வந்திருந்தபோது, மானிகர்ணிகா கடற்கரையருகே ஒரு ரீல்ஸ் வீடியோ எடுத்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்திருக்கலாம்.
16 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவில், அந்த பெண் மானிகர்ணிகா கடற்கரையில், கங்கை நதியில் தண்ணீரின் வேகமான ஓட்டத்திலும் கேமராவுக்காக போஸ் கொடுக்கிறார். எந்த ஆதாரமும் இல்லாமல் நதிக்குள் நின்று கொண்டு அவர் போஸ் கொடுக்கிறார்.
திடீரென்று நிலைகுலைந்து அவர் நிலை தடுமாறி நதியில் விழுகிறார். பின்னர் நதியின் வேகமான ஓட்டத்தில் அவரை வெள்ளம் அடித்து செல்கிறது. வீடியோவில் ஒரு சிறுவன் “மம்மி! மம்மி!” எனக் கத்தும் குரலும் கேட்கிறது. ஆனால், அது எதையும் மாற்ற இயலாத நிலை. வீடியோ திடீரென முடிகிறது. சில விநாடிகளுக்குள் நடந்த இந்த சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 16 அன்று X-ல் பகிரப்பட்ட இந்த வீடியோக்கு 66,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். பலரும், வெறும் லைக்குகள் மற்றும் பார்வைகளுக்காக உயிரை ஆபத்தில் இட்டதற்காக கோபம் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவத்திற்கு பின் மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் காவல்துறை இணைந்து சிறுமியை தேடும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். தீவிரமாக தேடியும், அந்த சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
உயிர் பாதுகாப்பை உதாசீனப்படுத்தி சமூக வலைதள வீடியோக்கள் எடுப்பது, பெரும் விபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும், ஆபத்தான இடங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உத்தர்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அவரை மீட்பதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
https://x.com/jpsin1/status/1912353223861584204