இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் குவித்தது. இதில் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், ஆகிய மூவரும் சதம் அடித்தனர். அதே நேரத்தில், மூன்று பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனதும், கடைசி 16 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்தது. இந்தியாவை விட வெறும் ஆறு ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்து, அபாரமாக பதிலடி கொடுத்தது. இங்கிலாந்து அணியில் போப் 106 ரன்கள் எடுக்க, ஹாரி புரூக் அபாரமாக விளையாடி 99 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த புரூக் தன்னுடைய பேட்டை தூக்கி எறிந்ததாக கூறப்படும் புகைப்படம் வைரலானாலும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
அதன்பின் ஆறு ரன்கள் மட்டும் முன்னிலையில் இருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன சாய் சுதர்சன், இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் 46 ரன்களுடன் களத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ளன. இந்த போட்டி டிராவை நோக்கிச் செல்லுமா அல்லது ஏதேனும் ஒரு அணிக்கு வெற்றியை பெற்றுத் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.