பாற்கடலில் துயில் கொள்வார் விஷ்ணு. இவர் ஐந்து தலை நாகமான ஆதிசேஷன் மீது துயில் கொள்வார்.
காசிப முனிவர் கத்ரு தம்பதியரின் மகன் ஆதிசேஷன். சிவபெருமான் கழுத்தில் இருக்கும் வாசுகி பாம்பின் சகோதரனும் இவர் தான். கடலுக்கு அடியில் 60 கி.மீ. முதல் 200 கி.மீ வரையில் கிடக்கக்கூடிய பாறை ஒன்றை கண்டறிந்துள்ளனர். இதற்கு செர்பல் டைல் ராக்ஸ் என்று பெயர். இது பாம்பின் தோலைப் போல வழவழப்பான மேற்பரப்பைக் கொண்டுள்ளது.
200 கி.மீ. தொலைவுக்கு அரை வட்ட வடிவில் சுருள் சுருளாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தப்பாறையின் அசைவு காரணமாக பூமிப்பந்தின் நடுவில் உள்ள கடினப்பாறைகள் எல்லாம் அதிர்ந்து பூகம்பம் ஏற்படுவதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள இந்த ஆதிசேஷன் ஒன்றுக்கும் மேற்பட்ட பல தலைகளுடன் நாராயணனுக்கு ஒவ்வொரு அவதாரத்திலும் உறுதுணையாக இருந்தவர் ஆதிசேஷன்.
விஷ்ணு ராமபிரானாக அவதரித்த போது அவருக்கு தம்பியாக இலக்குவனாக அவதாரம் எடுத்தவர் ஆதிசேஷன். இதன் காரணமாகவே இலக்குவன் தன் தமையன் ராமபிரானுக்கு நேர் எதிரான குணம் கொண்டவராக அதாவது வேகம் மிக்கவராகவும், மிகுந்த கோபம் உடையவராகவும் விளங்கினார்.
ஆதிசேஷனுக்கும் வாயுபகவானுக்கும் ஒருமுறை வாக்குவாதம் உண்டானது. வாயுபகவான் மலை, நாடு, நகரத்தை தூக்கி வீசினார். ஆதிசேஷன் தன் சம பலத்தால் அவற்றைக் காத்து நின்றார். ஒரு கட்டத்தில் வாயு பகவான் பிராண வாயுவை நிறுத்தினார்.
அனைத்து உயிர்களும் சுவாசிக்க முடியாமல் உயிருக்காகப் போராடியது. இந்திரன் முதலான அனைத்துத் தேவர்களும் ஆதிசேஷனை போட்டியிலிருந்து விலகுமாறு கூறினர். அதன்படி அவரும் விலகிக் கொண்டார். வாயுபகவான் வெற்றிக்களிப்பில் மலைகளை எல்லாம் தூக்கி வீசினார். இதைக்கண்டு கோபம் கொண்ட சிவன் பேயுரு கொள்ளுமாறு இருவரையும் சபித்தார்.
இருவரும் மனம் வருந்தி சாபவிமோசனம் பெற சிவனை வேண்டினர். வாயுபகவானை வைகை நதிக்கு வடக்கிலும், மதுரைக்கு கிழக்கிலும் பூஜை செய்யவும், ஆதிசேஷனை திருப்பாம்புரத்தில் 12 ஆண்டுகள் தவம் செய்தும் சாப விமோசனம் பெற ஆலோசனை கூறினார். அவ்வாறே வாயுபகவான் மதுரைக்கும், ஆதிசேஷன் திருப்பாம்புரத்திற்கும் வந்து பூஜை செய்து சாபம் நீங்கினர்.