தை அமாவாசையில் யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்கலாம்? எங்கு கொடுப்பது?

காசி, கயா தான் முன்னோர் வழிபாட்டுக்கு ரொம்பவே விசேஷமானது. கயாவுல பெருமாளை சாட்சியா வச்சி பிண்டம் வைத்து வழிபாடு பண்ணனும். காசியில சிவபெருமானை சாட்சியா வச்சி பிண்டம் வைத்து வழிபாடு பண்ணனும். ஆனா எங்கே…

thai amavasai tharpanam

காசி, கயா தான் முன்னோர் வழிபாட்டுக்கு ரொம்பவே விசேஷமானது. கயாவுல பெருமாளை சாட்சியா வச்சி பிண்டம் வைத்து வழிபாடு பண்ணனும்.

காசியில சிவபெருமானை சாட்சியா வச்சி பிண்டம் வைத்து வழிபாடு பண்ணனும். ஆனா எங்கே செய்தாலும் காசி, கயான்னு தான் சொல்லணும். அந்த வகையில் பெருமாளுக்கு விசேஷமான திருவோணம் நட்சத்திரமும் அமாவாசை அன்று இணைந்து வருகிறது.

தர்ப்பணம் யாரெல்லாம் பண்ணனும்?

அப்பா, அம்மா இல்லாதவர்கள், அம்மா இல்ல. அப்பா இருக்குறாங்க. அப்படின்னா எங்க அப்பா பண்ணுவாரு. நான் பண்ணனுமான்னு பையனுக்கு கேள்வி வரும். அப்பா பண்ணும்போது பையன் பண்ணனும்னு அவசியம் இல்லை. அப்பா பண்ண மாட்டாரு. இதுல எல்லாம் அவருக்கு நம்பிக்கை இல்லன்னா பையன் செய்யலாம்.

அப்பாவும், மகனும் இணைந்து தாயாருக்கு திதி கொடுக்கலாம். தப்பே கிடையாது. பெண்கள் எப்போதுமே கணவர் உயிரோடு இருக்கும் வரை மனைவி யாருக்கும் எள்ளும், தண்ணீரும் இறைக்கக்கூடாது. அதுக்குப் பதிலாக காகத்திற்கு சாப்பாடு வைக்கலாம். மதியம் இலை போட்டு படைக்கலாம். மாலையில் விளக்கேற்றலாம். தற்கொலை செய்து கொண்டவர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கலாமான்னு நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கு. கொடுக்கலாம். எல்லாமே ஆன்மா தான்.

அந்த ஆன்மா சாந்தி அடையணும். குறிப்பாக இதுபோன்ற தற்கொலை செய்து கொண்டவர்களுக்காக விசேஷமாகவே இறைவனிடத்தில் பிரார்த்தனை பண்ணி தர்ப்பணம் கொடுக்கும் வழக்கம் உண்டு. காலையில் தர்ப்பணம் கொடுக்குறது கோவில்ல தான் கொடுக்கணுமான்னு நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கு. வாய்ப்பு இருக்குறவங்க கோவில்ல போய் கொடுங்க.

நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது ரொம்ப விசேஷமானது. நதிக்கரை, கடற்கரையில் கொடுக்கலாம். கூட்டத்தில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே எளிய முறையில் தர்ப்பணம் கொடுக்கலாம். எள்ளும், தண்ணீரும் ஒரு தாம்பாலத்தில் கையில் எள்ளை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி இறைக்க வேண்டியதுதான். தர்ப்பை இருந்தால் வைத்துக் கொள்ளுங்க.

முன்னோர்களை எல்லாம் நினைத்துக் கொண்டு, காசி, கயா தலத்தையும் நினைவு வைத்து முன்னோர்களுக்கு இதுபோய்ச் சேரணும்னு மனதார நினைத்து வழிபடுங்க. இறைத்துவிட்டு சூரிய பகவானிடம் பிரார்த்தனை பண்ணிட்டு கால் படாத இடம், அல்லது சிங்க்ல அதை ஊற்றிக் கொள்ளலாம். அமாவாசை அன்று செய்யும் அன்னதானம் மிக மிக விசேஷமானது.