தை அமாவாசை விரதத்தின் சிறப்புகள்…. தர்ப்பணத்தில் எள்ளும் தண்ணீரும் இறைப்பது ஏன்?

நாளை (29.1.2025) தை மாத அமாவாசை. மிக முக்கியமான தினம். இந்த நாளின் சிறப்புகள் என்ன? முக்கியமாக முன்னோருக்குத் தர்ப்பணம் செய்கையில் எள்ளும், நீரும் இறைப்பது ஏன்னு பார்க்கலாமா… வருடத்தின் 3 அமாவாசைகள் மிக…

thai amavasai

நாளை (29.1.2025) தை மாத அமாவாசை. மிக முக்கியமான தினம். இந்த நாளின் சிறப்புகள் என்ன? முக்கியமாக முன்னோருக்குத் தர்ப்பணம் செய்கையில் எள்ளும், நீரும் இறைப்பது ஏன்னு பார்க்கலாமா…

வருடத்தின் 3 அமாவாசைகள் மிக மிக சிறப்புக்குரியது. புரட்டாசி, ஆடி, தை அமாவாசைகள். இதுல தை மாத அமாவாசை மிகவும் சிறப்புக்குரியது. மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமான காலம். பொழுது விடியக்கூடிய காலம் என்றால் அது தை மாதம். உத்தராயணக் காலம், தட்சணாயணக் காலம்னு பிரிச்சி வச்சிருக்காங்க.

உத்தராயணக்காலம்னா பொழுது விடியக்கூடிய காலம். இந்தக் காலத்தில் வர்ற முதல் அமாவாசை தை மாத அமாவாசை தான். அதனால் இதற்கு அவ்ளோ சிறப்பு. சூரிய பகவான் உதித்த பிறகுதான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதனால் எப்போ கொடுத்தாலும் சூரிய பகவான் உதயத்தைக் கணக்கிட்டுத்தான் அந்தத் தர்ப்பணத்தையும், முன்னோர் வழிபாட்டையும் ஆரம்பிக்க வேண்டும்.

அப்படி என்றால் தேவர்களுக்கு விடியக்கூடிய காலத்தில் வரக்கூடிய முதல் அமாவாசை இது என்பதால் தை மாத அமாவாசை அவ்வளவு சிறப்பு வாய்ந்தது.

பொதுவாகவே முன்னோர்களை வழிபடணும். எங்க தாத்தா பாட்டியும்தான் இறந்து போயிட்டாங்களே. அவங்களுக்கு எப்படி நாம இப்போ இறைக்கிற எள்ளும், தண்ணீரும் பயன்படுகிறது என சிலர் குதர்க்கமாக கேட்பார்கள். அது பற்றி ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை.

நமக்கு இதனால் பயன், பயன் இல்லை என்பது தேவையில்லை. நாம எப்போதும் நமக்கு உதவி செய்த முன்னோர்களை மறக்கக்கூடாது. ஒரு ஆன்மா அடுத்த பிறவி எடுக்குற வரைக்கும் அந்த ஆன்மாவுக்குத் தேவையான விஷயங்கள் எல்லாம் அவர்களது சந்ததியினர் செய்யும் இந்த வழிபாடுகளின் பலனாகத் தான் கிடைக்கிறது.