பிறவித்துன்பம் போக்க பாட்டிக்கு இறைவன் செய்த லீலை…! எத்தனை சோதனைகள் வந்தாலும் இடைவிடாத பக்தி!

By Sankar Velu

Published:

எத்தனை சோதனை வந்தால் என்ன எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கும். அதை அறியாமலா இறைவன் நமக்கு சோதனை தருகிறார் என்று எண்ணி வெற்றி நடை போட வேண்டும். அப்போது தான் நாம் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். அந்த வகையில் இன்றைய மார்கழி 12 (27.12.2022) வது நாளில் மாணிக்க வாசகர் அருளிய பாடல்.

ஆர்த்த பிறவித் துயர்கெட என்று தொடங்குகிறது.

Markali 12 1
Markali 12

பிறவி என்ற பெரும் துன்பத்தைப் போக்கக்கூடிய தெய்வமே…என்று கேட்கிறார். துன்பத்துக்கு எல்லாம் காரணம் பிறவி தான். அதனால் பிறவாமை என்ற பெருநிழலைக் கொடு என்று தான் ஞானியர் எல்லாம் கேட்டாங்க. அந்தப் பிறவித்துயரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகக் கொடுக்கிறார்கள்.

வந்திப்பாட்டியின் வாழ்க்கையில் இறைவன் செய்த லீலை அற்புதமானது. குழந்தைகள், கணவர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார்.

புட்டு செய்து வியாபாரம் நடத்தி வருகிறார். அவருக்கு அன்பு என்ற பக்தியில் திழைத்து இருந்தார். தினமும் புட்டு செய்யும் பாட்டி சொக்கநாதரின் கொடி மரம் அருகில் நின்று சுவாமிக்கு அர்ப்பணம் செய்வாளாம். திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் அழகாக சொல்கிறார்.

ஒரு தாய் தன் குழந்தைக்குக் கொடுப்பது போல மிகவும் அன்போடு கொடுப்பாள். உள்ளன்பு என்ற நெய்யை விட்டு புட்டைப் பிசைந்து ருசியாக சுவாமிக்கு அர்ப்பணம் செய்கிறாள். அப்போது மதுரையில் வைகை ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடி வருகிறது. வீட்டுக்கு ஒருவர் வந்து கரையை உயர்த்த வேண்டும் என்று மன்னர் கட்டளையிடுகிறார்.

பாட்டி சிவபெருமானிடம் கேட்கிறார். எனக்கு என்று யாரும் இல்ல. கணவரும் இல்ல. குழந்தையும் இல்ல. என்னால எப்படி வயசான காலத்துல வேலை பார்க்க முடியும் என்கிறார். என்ன நீதான் காப்பாத்தணும்னு இறைவனிடம் முறையிடுகிறார்.

இறைவனும் மண்வெட்டி, கூடை எடுத்து பாட்டி வீட்டின் வாசலில் வந்து நிற்கிறார். கூலியோ கூலி என அழைக்கிறார். எவ்வளவோ செல்வந்தர்கள் இருக்காங்க. அங்க போய் வேலை கேளு. கூலிக்கு காசு கொடுக்க எனக்கு வசதியில்ல. அப்படின்னா புட்டுக்கு வேலை செய்றேன். பாட்டியும் சரி என்கிறாள்.

இறைவன் புட்டுக்கு மண் சுமக்க ஆரம்பிக்கிறார். அன்று உதிர்ந்த புட்டை இறைவனுக்கு அள்ளிக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். சாப்பிட்டு விட்டு மரத்தடியில் படுத்து தூங்குகிறார் இறைவன். அவர் வேலை செய்யாமல் இப்படி இருக்கிறாரே என மன்னர் பிரம்பால் அடிக்க உலகில் உள்ள அத்தனை உயிர்களிடத்திலும் பட்டு வலித்தது.

புட்டு என்பது வந்திப்பாட்டி பல காலம் எடுத்த சஞ்சித வினை. இது பாட்டியின் வினைப் பயன். அதைத் தான் இறைவன் சாப்பிட்டுள்ளார். ஒருவருக்கு பிறவாமை கொடுக்க வேண்டும் என்பதற்காக இறைவன் கூலியாளாக இருந்து இறைவன் அருள்புரிகிறார்.

இந்தப் பாடலில் பிறவித்துன்பம் போக்கி இறைவா எனை ஆட்கொண்டு அருளணும் என்று மாணிக்கவாசக சுவாமிகள் இறைவனை வேண்டுகிறார்.

கனைத்து இளம் கற்றெருமை என்று ஆண்டாள் நாச்சியார் இன்றைய பாடலைத் தொடங்குகிறார்.

Aandal 12 1
Aandal 12

இந்தப்பாடலில் ஒரு சுவாரசியம் உள்ளது. நாங்க எல்லாம் வந்துட்டோம். உங்க வீட்டு வாசல்ல நிற்கிறோம். பால் எல்லாம் பெருகி சேறும் சகதியுமா வாசல்ல இருக்கு. பனி எல்லாம் கொட்டி தலையில இறங்குது. இவ்ளோ கஷ்டத்திலும் வந்து உன்னைக் கூப்பிடுறோமே நீ எழுந்து வர மாட்டேங்குறீயே என தோழியை அழைக்கிறாள்.

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நாம் இறைவனின் மீது வைத்துள்ள பக்தியில் இருந்து பின்வாங்கக்கூடாது. கோராக்கும்பர் வரலாறை உதாரணமாகச் சொல்லலாம். இவர் ஒரு மண்பானை வியாபாரி. எல்லாவற்றையும் கண்ணனாகவே நினைப்பார். விட்டலன் மீது அளவு கடந்த பக்தியுடன் வாழ்ந்து வந்தார்.

இவரது வாழ்க்கையில் இறைவன் சோதனைகளை ஆரம்பிக்கிறார். ஒரு நாள் இவரது மனைவி வெளியில் போகிறார். அப்போது தவழ்ந்த குழந்தை அவருக்கு உள்ளது. அதை கோராக்கும்பரிடம் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுப் போகிறார். ஆனால் கோராக்கும்பரோ கண்ணனைத் தவிர எதையும் கேட்கவில்லை. அதுவே பெரிய தியானம். அடியார்கள் வேலை செய்யும்போது கூட தியான சிந்தனையிலேயே இருந்தார்கள்.

Korakumbar
Korakumbar

மண்ணை அள்ளிப் பிசைந்து விட்டலா விட்டலா என மிதிச்சிக்கிட்டே இருக்கிறார். அப்போது குழந்தை விழித்து அங்க இங்கயும் பார்க்குது.

யாரையும் காணோமே என்று தவழ்ந்து தவழ்ந்து அப்பாவின் காலடியில் வருகிறது. அப்போதும் அதைக் கவனிக்காமல் பக்திப் பெருக்கில் இருந்த அவருக்கு விட்டலா விட்டலா என சொல்லியபடி குழந்தையை மண்ணோடு சேர்ந்து மிதித்துக் கொன்று விடுகிறார்.

அதன் பிறகும் அவர் விட்டலாவை விட்டுவிட வில்லை. எத்தனையோ துன்பங்கள் வந்தபோதும் இறைவனின் நாமத்தை உச்சரிக்கத் தவறுவதில்லை. அதனால் தான் அவரது பெயர் இன்று வரை நாம் நினைவில் வைத்துள்ளோம்.

அதேபோல எத்தனையோ துன்பங்களுக்கு இடையில் நான் வந்து உன் வீட்டு வாசலில் நின்ற போதும் நீ இன்னும் எழுந்திரிக்காமல் தூங்குகிறாயே. எல்லாரும் சேர்ந்து போய் கண்ணனின் அருளைப் பெற்று வருவோம் என அழைப்பதாக இந்தப் பாடலில் ஆண்டாள் கூறியுள்ளார்.