’வாரிசு’ படத்தில் விஜய்க்கு என்ன கேரக்டர் என்றே எனக்கு தெரியாது: ஷோபா வருத்தம்!

Published:

’வாரிசு’ திரைப்படத்தில் விஜய் என்ன கேரக்டரில் நடித்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது என விஜய்யின் தாயார் ஷோபா வருத்தத்துடன் கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

தளபதி விஜய் ’வாரிசு’ திரைப்படத்தில் நடித்து முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் இது ஒரு குடும்ப சென்டிமென்ட் படம் என்பதும் தெரிந்ததே. இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா வருகை தந்திருந்த நிலையில் அவரை விஜய் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்ற ஆதங்கம் உள்ளது.

shoba chandrasekhar1

இந்த நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த விஜய்யின் தாயார் ஷோபா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ’வாரிசு’ திரைப்படத்தில் விஜய் என்ன கேரக்டரில் நடித்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது என்றும் இது ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் திரைப்படம் என்று மட்டுமே உங்களைப் போல எனக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ‘தளபதி 67 படத்தில் அவர் என்ன கேரக்டரில் நடிக்கிறார் அந்த படத்தின் கதை என்ன என்று எனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார். விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஷோபா அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் என்ன முடிவு செய்திருக்கிறார் என்பது எனக்கு தெரியாது என்றும் அவரது முடிவு மற்றும் கடவுளின் சித்தப்படி எல்லாம் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் தற்போது விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது அவரது பெற்றோருக்குச் சுத்தமாக தெரியவில்லை என்பது போல் இந்த பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் உங்களுக்காக...