இறந்த நம் முன்னோர்களுக்கு அமாவாசை அன்று திதி கொடுப்பது வழக்கம். தர்ப்பணம் கொடுப்பது ஏன்? யார் யார் கொடுப்பது உள்ளிட்ட பல சந்தேகங்கங்களுக்கான பதில்களை இப்போது பார்ப்போம்.
பரமாத்மாவிடம் பிரிந்த உயிர்கள் பத்தினி என்னும் புவியில் உழன்று மீண்டும் பரமாத்மாவிடம் சேரவேண்டும் என்பது விதி. இது வினையின் பயனாக பிறவிகள் தரப்பட்டு அதிலும் உச்சப்பட்ட பிறவியாக மனித பிறவி தரப்பட்டு புவியில் பிறக்கிறோம்.
மனிதனாக பிறந்து செய்த பாவ, புண்ணிய வினைகளினால் நாம் ஆவி உலகம் என்னும் புவியின் முதல் அடுக்கான கருமையான இருள் உலகத்தில் அடையப்பட்டு தவிப்போம் என்றும் நம்முடைய உடலில் இருந்து வந்தவர்கள் அல்லது நம்மளுடைய ரத்த சம்மதம் பட்ட உயிர்கள் சூரியனை நோக்கி பூமி நெருங்கும் நாளில் இருளில் அடையப்பட்ட உயிர்களுக்கு சிரார்த்தம் என்று எள்ளு நீரை கட்டை விரலில் இறைப்பதால் அவர்கள் அதை பருகி தன்னுடைய பசியை தீர்த்து கொள்வார்கள் என்று கருடருக்கு நாராயண மூர்த்தி சொன்னதாக கருடர் ரிஷிகளுக்கு சொன்ன புராணத்தில் உள்ளது.
சித்தர்கள் நமக்கு எளிமையாக அம்மாவாசை தினம் மட்டும் ஒரு பொழுது உணவு கொள்ளாமல் உச்சியில் சூரியன் பூமியின் மையத்தை கடந்த பின் இறந்தவர்களுக்கு பூசைகளும், படையலும் செய்து அவர்கள் பசியை தீர்த்து ஆசிகள் பெற்று கொள் என்று நமக்கு எளிமையான சிரார்த்த முறைகளை சொல்லியுள்ளார்கள் என்று புரிந்து கொள்ளவேண்டும்.
திதி கொடுப்பதினால், நம்முடைய உடலில் நோய்களின் தாக்கத்தை தடுக்கலாம், தடைகளாகும் சுபகாரியம்களை நிறைவாக செய்யலாம். குலத்தில் குழந்தை செல்வம் கிடைக்கும், குலதெய்வ ஆசிகள் கிடைக்கும். தம்பதியர் ஒற்றுமையாக வாழ்வர் என்பதனை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
விண்ணில் உள்ள சூரியன் புவிக்கு கதிர்களை செலுத்தும் பொழுது, அது உலகில் உள்ள எல்லா நீர்நிலைகளிலும் தென்படுவதை போல ஒரு ஜீவ ஆத்மாவில் உண்டான பல உயிர்கள் ஆயினும், அவரவர் தனி தனியாக தங்கள், தான் வந்த ஆன்மாவுக்கு திதி என்னும் எள்ளு நீரை கட்டை விரலின் முலமாக தர வேண்டும் என்று நூல்கள் சொல்கிறது .
இறந்த முதல் வருடம் மட்டும் தலைச்சன் பிள்ளை வீடு அல்லது அவர் இறந்த வீட்டில் அவர் இறந்த திதி அன்று எல்லோரும் சேர்ந்து திதி தரவேண்டும், அடுத்த வருடம் அவரவர் தனியாக அவர்கள் வீட்டில் தேய் பிறையில் வரும் திதியில் தரவேண்டும். இறந்த திதி வளர்பிறையாக இருந்தாலும் தேய்பிறையில் தரவேண்டும்.
பெண்களை மட்டும் பெற்றவர்கள் இறந்தால் மகளிடம் பிறந்த ஆண்பிள்ளை கொள்ளி வைக்க வேண்டும் என்றும் முதல் வருடம் மட்டும் பெண்கள் திதி தரவேண்டும். பிறகு, வருடம் ஒரு முறை படையல் போட்டு பூசை செய்யலாம் என்று நூல்கள் சொல்கிறது .
தம்பதியர்களில் மனைவி முதலில் இறந்தால் கணவன் உயிரோடு இருக்கும் வரை அவளுக்கு திதி தரவேண்டும். கணவன் தவிர பிள்ளைகள் தர கூடாது என்றும், தந்தை இறந்த பிறகு, இருவருக்கும் தந்தையின் இறந்த திதி அன்று ஒன்றாக இருவருக்கும் சேர்த்து பிள்ளைகள் தரவேண்டும் என்று நூல்கள் சொல்கிறது.
தாய்க்கு, தந்தைக்கு என்று தனித்தனியாக திதி கொடுக்க கூடாது, தாய் இறந்த முதல் வருடம் மட்டும் தனியாக கொடுத்து விட்டு மறுமுறை தந்தையுடன் சேர்த்து ஒன்றாக தான் தரவேண்டும் என்று நூல்கள் சொல்கிறது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



