இசைஞானி இளையராஜா பல வருடங்களாக திருவண்ணாமலை கிரிவலம் சென்று வருகிறார். அவர் சென்றபோது ஏற்பட்ட சில புல்லரிக்க வைக்கும் அனுபவங்களை இப்படி சொல்கிறார்.
1980ல பகவான பார்க்குறதுக்காக ஆசிரமத்துக்குப் போறேன். போற இடத்துல குஞ்சு சுவாமிகள் இருக்காரு. நானும் அவரும் திருவண்ணாமலை கிரிவலம் போனோம். சுற்றி முடிச்ச இடத்துல வருணபகவான் மழையைப் பொழியறாரு. நீங்க பெரிய சித்தர் போலன்னு சொன்னாரு. என்னன்னு கேட்டேன். நீங்க கிரிவலம் முடிச்ச நேரத்துல வருணபகவான் ஆசி கொடுக்குறாரு பார்த்தீங்கள்லன்னு சொன்னார்.
‘ஐயய்யோ அப்படி இல்ல. நான் வந்த நேரத்துக்கு மழை வந்துருக்கு’ன்னு சொன்னேன். அடுத்த பௌர்ணமிக்குப் போறோம். அப்பவும் அதே இடத்துல மழை. ‘பார்த்தீங்களா… நான் சொன்னேன். நீங்க சித்தர்தான்’னு குஞ்சு சுவாமிகள் சொன்னார். நான் செருப்பு போடாமல் தான் கிரிவலம் போவேன். பகவான் எந்தப் பாதையில போவாங்கன்னு கேட்டேன்.
அவர் 3 பாதையில போவார் என்றார். அதுல நடு பாதையை நான் தேர்ந்தெடுத்துக்கிட்டேன். கண்ணாடித் தூளை உடைத்துப் போட்டால் எப்படி இருக்குமோ, அதுமாதிரி அங்குள்ள பாறைகள் சிறு சிறு துகள்களாக உடைந்து கிடந்தது. காலடி எடுத்து வைத்தால் குத்தும்.
‘வெரிகுட். நீ செஞ்ச பாவத்துக்கு இதெல்லாம் பட வேண்டியதுதான்’னு நினைச்சேன். 80ல இருந்து 20 வருடங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரிவலம் வருவது வழக்கம். அடி அண்ணாமலையில் லிங்கம் இருக்கும். நான் இருப்பேன். என் கூட உள்ளவங்க வெளியே போயிடுவாங்க.
ஒரு நாள் நானும் அந்த லிங்கமும் மட்டும் இருக்கோம். நல்ல வைப்ரேஷன் இருக்கும். மாணிக்கவாசகர், அப்பர், சம்பந்தர் எல்லாம் அங்கு உட்கார்ந்துதான் பாடிருக்காங்க. நான் அங்கே சாமி கும்பிட்டு விட்டு வெளியே வரேன். நடந்து வந்தா என் காலைப் போட்டு அந்த வைப்ரேஷன் போட்டு அமுக்குது. வீட்டுக்கு வரேன். அதே நினைவு. 3மாதம் போயிடுச்சு. அப்புறம் வந்து உட்காரும்போதுதான் இந்தப் பாடக்கிடைத்த பரம்பொருளே என்ற பாடலுக்கான அர்த்தம் புரிந்தது என்கிறார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



